எம்.ஜி.ஆர். இரு வேடங்களில் நடித்த எங்க வீட்டு பிள்ளை ரீமேக் ஆகிறது

Bookmark and Share

எம்.ஜி.ஆர். இரு வேடங்களில் நடித்த எங்க வீட்டு பிள்ளை ரீமேக் ஆகிறது

1965–ல் எம்.ஜி.ஆர். இரு வேடங்களில் நடித்த எங்க வீட்டுப்பிள்ளை படம் வந்தது. இதில் நாயகிகளாக சரோஜாதேவி, ரத்னா நடித்து இருந்தனர். சாணக்யா இயக்கினார்.

இப்படத்தில் இடம் பெற்ற ‘நான் ஆணையிட்டால் அது நடந்துவிட்டால்’, ‘கண்களும் காவடி’, ‘குமரி பெண்ணின் உள்ளத்திலே’, ‘மலருக்கு தென்றல்’, ‘நான் மாந்தோப்பில் நின்றிருந்தேன்’, ‘பெண் போனால்’ போன்ற பாடல்கள் பட்டி தொட்டி யெங்கும் கலக்கின.

சென்னை, மதுரை, திருச்சி, சேலம், கோவை நகரங்களில் 18 திரையரங்குகளில் 100 நாட்களை தாண்டி இப்படம் ஓடியது. வசூலிலும் சாதனை படைத்தது.
எங்க வீட்டு பிள்ளை படத்தை ரீமேக் செய்ய தற்போது ஏற்பாடுகள் நடக்கிறது.

இதில் கதாநாயகனாக நடிக்க முன்னணி நடிகர்கள் பலரும் விருப்பம் தெரிவித்து உள்ளனர். நவீன தொழில் நுட்பத்தில் இந்த படத்தை எடுத்தால் வெற்றிகரமாக ஓடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

எம்.ஜி.ஆர்., கேரக்டரில் விஜய், விக்ரம், அஜீத், சூர்யா ஆகியோரில் ஒருவர் நடிப்பார் என்று பேச்சு அடிபடுகிறது. இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தெரிகிறது. 


Post your comment





Related News
விவேக்கின் "எழுமின்" படத்திற்காக தனுஷ் பாடும் பாடல்..!
ஆர்யா என்னையும் ஏமாற்றி விட்டார் - பிரபல சீரியல் நடிகை பரபரப்பு பேச்சு .!
கல்யாணம் பண்ணிட்டு டைவர்ஸ் பண்ண முடியாது -முக்கிய போட்டியாளரை எலிமினேட் செய்த ஆர்யா
ஆர்யாவின் எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சிக்கு தடையா? - நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு.!
ஆத்தாடி எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சிக்காக ஆர்யாவுக்கு சம்பளம் இவ்வளவா?
இதுவரை வெளிவராத எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சி புகழ் இலங்கை பெண் சுசானாவின் மகன் புகைப்படம் உள்ளே
ஆர்யாவுக்கு ஏற்கனவே கல்யாணம் ஆயிடுச்சு? - அவரே கூறிய பதில்
டிவி நிகழ்ச்சியில் உண்மையிலேயே திருமணம் செய்வாரா ஆர்யா? அவரே கூறிய பதில்
மலையாள இயக்குனர் ராஜேஷ் பிள்ளை மரணம்
எங்க வீட்டு பிள்ளை 50 ஆண்டு நிறைவு - விழா எடுக்கும் ரசிகர்கள்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions