எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் சொர்க்கத்தில் உரையாடல்! வைரலாகும் வாட்ஸ் ஆப் தகவல்

Bookmark and Share

எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் சொர்க்கத்தில் உரையாடல்! வைரலாகும் வாட்ஸ் ஆப் தகவல்

எம்.ஜி.ஆரும் ஜெயலலிதாவும் இணைந்து பல படங்களில் தமிழ் சினிமாவில் நடித்தவர்கள். இவர்களது ஜோடிக்கு அப்போதைய ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பு.
பல ஹிட் படத்தை கொடுத்த இவர்கள் பற்றி இப்போது வாட்ஸ் ஆப் என்னும் சமூகவலைதலத்தில் ஒரு தகவல் பரவி வருகிறது.
இதில் ஜெயலலிதா இறந்து சொர்கத்திற்கு சென்றதும் எம்.ஜி.ஆர் அவரிடம் எப்படி பேசியிருப்பார் என பெரிய உரையாடலே போட்டுள்ளார்கள்.

எம்.ஜி.ஆர் :- வா அம்மு இப்ப தான் என்னை பார்க்க ஞாபகம் வந்ததா ?
ஜெ :- புதிய பூமியில் ஆயிரத்தில் ஒருவனாக இல்லாமல் நீங்கள் குடியிருந்த கோவிலான “கழகத்தை” அடிமைப் பெண்ணாக இல்லாமல் தனிப்பிறவி யாக “கழகத்தை” பாதுகாத்தேன்.
எம்.ஜி.ஆர் :- மகிழ்ச்சி!……. என்ன சொல்லிவந்தாய்?
ஜெ :- உடல்நிலை சரியில்லை என்று!!!
எம்.ஜி.ஆர் :- அமெரிக்கா சென்றாயா?
ஜெ :- அப்பல்லோவுக்கு சென்றேன்!
எம்.ஜி.ஆர் :- அதுபோதுமே” சொர்க்கத்துக்குவர
ஜெ :- (சோகமாக) மக்களின் பாரமும்குறையவில்லை என் மனபாரமும் குறையவில்லை புறப்பட்டு வந்து விட்டேன்.
எம்.ஜி.ஆர் :- நம்கட்சி.
ஜெ :- கட்டுக்கோப்பாக இருக்கிறது தலைவா
எம்.ஜி.ஆர் :- நன்றி அம்மு. நம்இரத்தத்தின்இரத்தங்கள்..
ஜெ :- ஏதோ இருக்கிறார்கள் தலைவா… நீங்கள் இல்லாத வேதனையில் அன்று , நான் இல்லாத வேதனையில் இன்று.
எம்.ஜி.ஆர் :- நண்பர் கருணாநிதி
ஜெ :- ஏதோ அலர்ஜியாம் காவேரியில் இருக்கிறராம்.
எம்.ஜி.ஆர் :- நல்ல வேளை அப்பல்லோவுக்கு செல்லவில்லை ?
ஜெ :- முதல்வராகத்தான் இங்கு வருவேன் என்று அடம் பிடிக்கிறார் நான்விடவே இல்லை.
(அப்போது சோ வருவதைப்பார்த்து)
எம்.ஜி.ஆர் :- அடடா துக்ளக் நீயும் வந்து விட்டாயா? ஏற்கனவே இங்கே ஒருநாரதர் இருக்கிறாரே
சோ (சிரித்தபடி) :- நாரதர் கலகம் நன்மையில் முடியும்.
(ஜெ வை பார்த்ததபடி) யாருக்கு வழி காட்டினேனோ அவரே வந்த பிறகு எனக்கு அங்கென்ன வேலை?
எம்.ஜி.ஆர் :- அது சரி அம்மு உனக்கு அன்பு தங்கையல்லவா!
சோ :- நாடோடி மன்னா ...இங்கே நீங்க எந்த கட்சி.? நான் ஏதாச்சும் ஆலோசனை தரட்டுமா?
எம்.ஜி.ஆர் :- (சோ முதுகில் தட்டிக்கொடுத்து) இங்கே கட்சியும்கிடையாது. கொடியும் கிடையாது. எதிரியும் கிடையாது .அதை விடகூட இருந்தே குழி பறிக்கும் துரோகிகள் கிடையவே கிடையாது. வாங்க நிம்மதியாய் இருக்கலாம்.


Post your comment

Related News
ஜெயலலிதா வாழ்க்கைப் படத்தில் சமுத்திரக்கனி
ஜெயலலிதாக வாழ்க்கைப் படத்தில் சசிகலாவாக நடிக்க இரு நடிகைகளுடன் பேச்சுவார்த்தை
எம்.ஜி.ஆர் இருந்து கலைஞர் இறந்திருந்தால்.. மெரினா சர்ச்சைக்கு கமல்ஹாசன் அதிரடி பதிவு
எம்.ஜி.ஆரின் இதயக்கனி படப்பிடிப்பு நடந்த இடத்தில் பிரபுசாலமனின் “ கும்கி 2 “ படப்பிடிப்பு
"எம். ஜி. ஆர்" திரைப்படத்தின் 'டீஸர்' வெளியீடு
எம்ஜிஆரின் ஸ்டைல் எனக்கு மிகவும் பிடிக்கும் - நடனப்புயல் பிரபுதேவா
சிம்புக்காகவே காத்திருக்கும் அரசியல் கட்சி- ரஜினி, கமலை எதிர்க்க போகிறாரா
கிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜு படத்தில் எம்.ஜி ஆருக்கு ஜோடியான ஜெயலலிதா.!
எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவிற்கான விருதை பெற்றார் கமல்ஹாசன்
புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் படத்திற்கு நடிகர் விஷால் மரியாதை
About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions