எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவிற்கான விருதை பெற்றார் கமல்ஹாசன்

Bookmark and Share

எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவிற்கான விருதை பெற்றார் கமல்ஹாசன்

நடிகர் கமல்ஹாசன் தீவிர அரசியலில் களமிறங்க இருக்கிறார். வருகிற 21-ந்தேதி ராமேசுவரத்தில் உள்ள மறைந்த அப்துல்காம் வீட்டில் இருந்து கமல் தனது அரசியல் பயணத்தை தொடங்குகிறார். அங்கிருந்து சுற்றுப்பயணம் செய்து மக்களை சந்தித்து பொதுக்கூட்டத்தில் கலந்துக் கொள்ள இருக்கிறார்.

இந்நிலையில், மரியாதை நிமித்தமாக தென்னிந்திய திரைப்பட பத்திரிகை தொடர்பாளர் (PRO) யூனியன் உறுப்பினர்களை நேரில் சந்தித்து பேசியிருக்கிறார். உறுப்பினர்கள் அனைவரும் கமலின் அரசியல் பிரவேசத்திற்கு வாழ்த்து தெரிவித்தார்கள்.

பி.ஆர்.ஓ யூனியன் நடத்திய எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவிற்கான விருது, யூனியன் சார்பில் அவருக்கு வழங்கப்பட்டது.

படத்தில், யூனியன் தலைவர் டைமண்ட் பாபு, செயலாளர் பெருதுளசி பழனிவேல், பொருளாளர் என்.விஜயமுரளி, துணை செயலாளர் பி.யுவராஜ், முன்னாள் தலைவர் நெல்லை சுந்தரராஜன், செயற்குழு உறுப்பினர் கிளாமர் சத்யா ஆகியோர் உடன் இருக்கிறார்கள்.


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions