கிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜு படத்தில் எம்.ஜி ஆருக்கு ஜோடியான ஜெயலலிதா.!

Bookmark and Share

கிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜு படத்தில் எம்.ஜி ஆருக்கு ஜோடியான ஜெயலலிதா.!

தமிழ் சினிமாவில் மிக பெரிய நடிகர்களாக விளங்கியவர் எம்.ஜி.ஆர், இவர் பல படங்களில் நடித்துள்ளார். இவர் நடித்த உலகம் சுற்றும் வாலிபன் படத்தின் அடுத்த பாகமாக கிழக்கு ஆப்ரிக்காவில் ராஜு என்ற படத்தை எடுக்க ஆசைப்பட்டார்.

ஆனால் அவர் அதற்குள் தேர்தலில் வென்று முதலமைச்சராகி விட்டதால் அவருடைய கனவு நிறைவேறாமல் போய் விட்டது. தற்போது எம்ஜிஆருக்கு நெருக்கமானவர்களில் ஒருவரும் அவருடன் பல திரைப்படங்களில் நடித்தவருமான ஐசரிவேலனின் மகன் ஐசரி கணேஷ், எம்ஜிஆரின் நிறைவேறாத கனவை தற்போது நிறைவேற்றவுள்ளார்.

அதற்காக அனிமேஷனில் எம்.ஜி.ஆர், நாகேஷ், நம்பியார், தேங்காய் சீனிவாசன் ஆகியோர் நடிப்பது போல படத்தை இயக்க உள்ளார், இந்த படத்தில் எம்.ஜி.ஆருக்கு ஜோடியாக முன்னாள் முதல்வரும் நடிகையுமான செல்வி ஜெ.ஜெயலலிதா நடிக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions