ஜல்லிக்கட்டு போராட்டத்தின் பின்னணியில் உருவாகும் புதிய படம் - ஹீரோ யார் தெரியமா ?

Bookmark and Share

ஜல்லிக்கட்டு போராட்டத்தின் பின்னணியில் உருவாகும் புதிய படம் - ஹீரோ யார் தெரியமா ?

ஷஜினா ஷஜின் மூவிஸ் மற்றும் SPK Films ஆகிய நிறுவனங்கள் சார்பாக ஷாஜகான் & செல்வ குமார்  இணைந்து தயாரிக்கும் படம் தான் ‘வாட்ஸ் அப்’.. இந்தப்படத்தில் எம்.ஜி.ஆரின் பேரன் வி.ராமச்சந்திரன் கதாநாயகனாக நடிக்கிறார். புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரின் துணைவியார் ஜானகி அம்மாளின் தம்பி மகள் சுதா விஜயகுமாரின் மகன் தான் இந்த வி.ராமச்சந்திரன்.. இவருக்கு தன்னுடைய பெயரையே சூட்டியதும் கூட எம்.ஜி.ஆர் தான். 

இந்தப்படத்தில் ராமச்சந்திரனுக்கு ஜோடியாக பெங்களூரை சேர்ந்த தமிழ்ப்பெண்ணான தீப்தி நடிக்கிறார். இவர்கள் தவிர 'அஞ்சல்' மோகன் - ஜீவிதா, அர்ஜுன் – சாட்ரியா , சங்கர் விஜய்  - ரக்ஷிதா, காதல் சுகுமார் - லாலித்தியா  என இன்னும் நான்கு ஜோடிகள் நடிக்கின்றனர். இயக்குனர் ரஷீத் இந்தப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார். மேலும் JV இந்தப்படத்திற்கு இசையமைக்கிறார். 

இந்த வருட துவக்கத்தில் தமிழகத்தை மட்டுமல்லாமல் உலகத்தையே திரும்பி பார்க்க வைத்த ஜல்லிக்கட்டு போராட்டத்தின் பின்னணியில் இந்தப்படத்தின் கதை உருவாக்கப்பட்டுள்ளது. அலங்காநல்லூர் கிராமத்தை சேர்ந்த ஆறு இளைஞர்கள், எங்கிருந்தோ வந்த ஒரு தனியார் அமைப்பு தங்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டை தடை செய்ய முனைவதை கண்டு பொங்கி எழுகின்றனர்..

அலங்காநல்லூரில் அவர்கள் போராட்டத்தின் வீச்சு குறைவாக இருக்கவே, போராட்டக்களத்தை சென்னை மெரீனா பீச்சுக்கு மாற்றுகின்றனர்.. அதன்பின் என்ன நடக்கிறது என்பது மீதிக்கதை.. வரும் நவம்பர் -15ல் இதன் படப்பிடிப்பு துவங்குகிறது. உடுமலை, பொள்ளாச்சி, மூணாறு மற்றும் சென்னை ஆகிய பகுதிகளில் இதன் படப்பிடிப்பு நடைபெற இருக்கிறது.


Post your comment





Related News
படங்களில் நடிக்கக் கூடாது - சிம்புவுக்கு எதிராக தயாரிப்பாளர் மீண்டும் புகார்
பையனூரில் சினிமா ஸ்டூடியோவை 26-ந்தேதி திறந்து வைக்கிறார் முதலமைச்சர் பழனிசாமி
ரசிகர்களை சிரிக்க வைக்கும் வகையில் உருவாகியிருக்கும் "அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா"..!
காதலைப் பேசும் ‘ஜுலை காற்றில்..’
வீரா நடிப்பில் வெளிவரவிருக்கும் "அரசியலில் இதெல்லாம் சாதாரணமப்பா"..!
டாக்டர் கலைஞர் கருணாநிதி மரணம் நடிகர் சங்கம் இரங்கல் செய்தி!
நடிகர் சங்க நிர்வாகிகள் தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்தனர்
இறுதிகட்ட படப்பிடிப்பில் அங்காடித்தெரு மகேஷின் "வீராபுரம்".
ரஜினி பற்றிய லேட்டஸ்ட் வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த பிரபல இயக்குனர்
ரஜினிக்கு கைக்கொடுக்குமா அவரது மெகா ஹிட் படம்- அது என்னவென்று தெரியுமா








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions