எம்.ஜி.ஆர்.: சிவாஜி படங்கள் இன்று ரிலீஸ்: தியேட்டர்களில் திரண்ட ரசிகர்கள்

Bookmark and Share

எம்.ஜி.ஆர்.: சிவாஜி படங்கள் இன்று ரிலீஸ்: தியேட்டர்களில் திரண்ட ரசிகர்கள்

சிவாஜியின் ‘கர்ணன்’ படம் டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் நவீனபடுத்தப்பட்டு சென்னையில் இன்று ரிலீசானது. சத்யம், எஸ்கேப், சாந்தி, சங்கம், அபிராமி, பி.வி.ஆர். உள்ளிட்ட பல தியேட்டர்களில் திரையிடப்பட்டு உள்ளது.

இந்த நிலையில் சிவாஜி படத்துக்கு போட்டியாக எம்.ஜி.ஆரின் ‘குடியிருந்த கோயில்’  படம் ராயப்பேட்டையில் உள்ள உட்லண்ட்ஸ் தியேட்டரில் இன்று திரையிடப்பட்டது. எம்.ஜி.ஆர். சிவாஜி ரசிகர்கள் காலையிலேயே தியேட்டர்களில் திரண்டார்கள்.

கர்ணன் படம் திரையிட்ட தியேட்டர்களில் சிவாஜி ரசிகர்கள், பேனர் கொடி தோரணம் கட்டினார்கள். சிவாஜியின் கட்அவுட்களும் வைத்தார்கள். சாந்தி தியேட்டரில் ஒரு ரசிகர் நாவில் சூடம் கொளுத்தி வழிபட்டார். படம் பார்க்க வந்தவர்களுக்கு இனிப்புகளும் வழங்கினார்.

எம்.ஜி.ஆர் ரசிகர்கள் அதற்கு போட்டியாக குடியிருந்த கோயில் படம் ரிலீசான உட்லண்ட்ஸ் தியேட்டரில் எம்.ஜி.ஆரின் கட்அவுட் வைத்து பேனர், கொடி தோரணம் கட்டினர். பட்டாசுகளும் வெடித்தார்கள்.

ராயபுரம் இரா. ஆனந்தன், எல். கலைவாணன், எம்.பூபாலன், முரளி, வெங்கட் உள்ளிட்ட எம்.ஜி.ஆர். ரசிகர்கள் டிக்கெட் எடுக்க கியூவில் நின்றவர்களுக்கு இனிப்பு வழங்கினர்.


Post your comment





Related News
சிவாஜியுடன் ஒப்பிடாதீர்கள் - விக்ரம் பிரபு
சிவாஜி பேரன் - சுஜா வருணி நவம்பரில் திருமணம்
புதிய பரிமாணத்தில் வெளியாகும் வசந்த மாளிகை
இதுவரை சிவகுமார் ஆற்றிய உரைகளிலேயே ஆகச்சிறந்த உரை இதுதான் என்றே சொல்லவேண்டும்..!
முக்கிய படத்திற்காக ரஜினிகாந்த் பெற்ற அட்வான்ஸ் தொகை இவ்வளவு தானாம்! கேட்டால் நம்பமாட்டீர்கள்
இறுதி சடங்கில் கலந்து கொள்வதற்காக இத்தனை துன்பங்களுக்கு இடையே அஜித் வந்துள்ளாரா? பிரம்மிக்க வைத்த தல
எம்.ஜி.ஆர் இருந்து கலைஞர் இறந்திருந்தால்.. மெரினா சர்ச்சைக்கு கமல்ஹாசன் அதிரடி பதிவு
எம்.ஜி.ஆரின் இதயக்கனி படப்பிடிப்பு நடந்த இடத்தில் பிரபுசாலமனின் “ கும்கி 2 “ படப்பிடிப்பு
நடிகர் சங்க நிர்வாகிகள் தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்தனர்
"எம். ஜி. ஆர்" திரைப்படத்தின் 'டீஸர்' வெளியீடு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions