தமிழிலும் ஹிட் கொடுக்க ஆசைப்படும் மியா ஜார்ஜ்!

Bookmark and Share

தமிழிலும் ஹிட் கொடுக்க ஆசைப்படும் மியா ஜார்ஜ்!

மலையாளத்தில் வளர்ந்து வரும் நடிகைகளில் மியா ஜார்ஜ் முக்கிய நடிகையாக இருக்கிறார்.  அதோடு அவர் நடித்த பெரும்பாலான படங்கள் சூப்பர் ஹிட்தானாம். அந்த அளவுக்கு சிறந்த கதைகளாக செலக்ட் பண்ணி நடிக்கிறாராம்.

முக்கியமாக, வேண்டப்பட்ட டைரக்டர், பெரிய ஹீரோ படம் என்பதற்காக எந்த படத்தையும் அவர் ஓகே செய்வதில்லையாம். கதை தனக்கு பிடித்தால் மட்டுமே நடிக்கிறாராம்.

அந்த வகையில் தமிழில் அவர் நடித்த அமரகாவியம் படத்தில்கூட அதிகமான நம்பிக்கையுடன்தான் நடித்தாராம் மியா. ஆனால் அப்படம் அவருக்கு அதிர்ச்சி தோல்வியை கொடுத்து விட்டது.

காரணம், மலையாள ரசிகர்களின் ரசனையை புரிந்து வைத்துள்ள மியாவுக்கு தமிழ் ரசிகர்களின் ரசனை புரியாததே இதற்கு காரணமாம். ஆனால், இப்போது தமிழில் அவர் நடித்துள்ள இன்று நேற்று நாளை படம் கண்டிப்பாக ஹிட்டாகும் என்று எதிர்பார்க்கிறார்  மியா ஜார்ஜ்.

மேலும், அமரகாவியம் படம் தோல்வி என்றபோதும், கடந்த ஆண்டில் அவர் நடித்த 5 மலையாள படங்களும் சூப்பர் ஹிட்டாம். அதனால் அந்த ஹிட் இனிமேல் தமிழிலும் தொடரும் என்று கூறி வரும் மியா, இப்போதெல்லாம் கேரளாவில் வெளியாகும் தமிழ்ப் படங்களை ஒன்று விடாமல் பார்த்து விடுகிறாராம்.


Post your comment





Related News
எனக்கு அந்த நிலைமைகள் இதுவரை ஏற்படவில்லை - ஆண்ட்ரியா
கவர்ச்சியாக நடிக்க மறுக்கும் ஆண்ட்ரியா
சினிமாவில் ஆணாதிக்கம் அதிகமாக உள்ளது - மியா ஜார்ஜ்
நிர்வாணமாக கூட நடிப்பேன், ஆனால்? - பிரபல நடிகை ஓபன் டாக்.!
விஜய் கூட நடிச்சா தான் இதெல்லாம் நடக்குமா? கொடுமை - பிரபல நடிகை ஆவேச பேச்சு.!
கவர்ச்சி நடிகை மியா கலிபா எடுத்த அதிரடி முடிவு- அதிர்ச்சியில் ரசிகர்கள்
பட்ஜெட்டை விட மூன்று மடங்கு வசூல் செய்து பிரம்மாண்ட சாதனை படைத்த அவள்.!
அரவிந்த் சாமி படத்தில் இணைந்த ஆண்ட்ரியா
நேர்காணலில் ஆண்ட்ரியாவிடம் ஆபாசமாக பேசிய தொகுப்பாளருக்கு எதிர்ப்பு
நான் இந்தியாவில் கால் வைக்க மாட்டேன்! மலையாள படத்தில் நடிப்பது பற்றி மியா கலீபா








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions