கிராமத்து நாயகியாக மாறும் மியா ஜார்ஜ்!

Bookmark and Share

கிராமத்து நாயகியாக மாறும் மியா ஜார்ஜ்!

மலையாள சினிமாவில் முன்னணி நடிகையாகி விட்டவர் மியா ஜார்ஜ். அங்கு இவர் நடித்த வேடங்கள் மட்டுமின்றி நடித்த படங்களும் பேசப்பட்டு வருகிறதாம். அதோடு, வெயிட்டான வேடங்கள் என்றால் மியா ஜார்ஜைதான் அங்குள்ள இயக்குனர்கள் புக் பண்ணுகிறார்களாம்.

அந்த அளவுக்கு எத்தனை ரிஸ்க்கான கதாபாத்திரம் என்றாலும் அதை உணர்ந்து நடிக்கிறாராம் மியா. ஆனால் மலையாளத்தில் கைவசம் பல படங்கள் இருந்தபோதும், எல்லா மலையாள நடிகைகளையும் போன்று மியாவுக்கும் அசின், நயன்தாரா போன்று பிரபல நடிகையாக வேண்டும் என்ற ஆசை ஏற்பட அமரகாவியம் படம் மூலம் தமிழுக்கு என்ட்ரி கொடுத்தார்.

அதையடுத்து இப்போது இன்று நேற்று நாளை படத்தில் விஷ்ணுவுடன் நடித்து விட்டவர், அடுத்தபடியாக அட்டகத்தி தினேசுடன் ஒருநாள் கூத்து என்ற படத்தில் நடிக்கிறார். முந்தைய படங்களில் சிட்டி பெண்ணாக நடித்துள்ள மியா ஜார்ஜ், இந்த படத்தில் பக்கா கிராமத்து பெண்ணாக நடிக்கிறார்.

அதாவது இதற்கு முன்பு லட்சுமிமேனன் நடித்த சுந்தரபாண்டியன், குட்டிப்புலி, பாண்டியநாடு, கொம்பன் படங்கள் வரிசையில் மியாவும் நம்ம ஊர் தமிழச்சியாக மாறுகிறாராம்.

 ஆக, இந்த படத்தில் அவர் நடிக்கும் லட்சுமி என்கிற கதாபாத்திரம் பேசப்பட்டு விட்டால், அதன்பிறகு லட்சுமிமேனனுக்கான வாய்ப்புகள் மியா ஜார்ஜை நோக்கித்தான் அணிவகுக்கும் என்கிறார்கள்.

 


Post your comment





Related News
வட சென்னை படத்தில் சர்ச்சை காட்சி-வசனம் நீக்கம்: படக்குழு அறிவிப்பு
எனக்கு அந்த நிலைமைகள் இதுவரை ஏற்படவில்லை - ஆண்ட்ரியா
கவர்ச்சியாக நடிக்க மறுக்கும் ஆண்ட்ரியா
சினிமாவில் ஆணாதிக்கம் அதிகமாக உள்ளது - மியா ஜார்ஜ்
நிர்வாணமாக கூட நடிப்பேன், ஆனால்? - பிரபல நடிகை ஓபன் டாக்.!
விஜய் கூட நடிச்சா தான் இதெல்லாம் நடக்குமா? கொடுமை - பிரபல நடிகை ஆவேச பேச்சு.!
கவர்ச்சி நடிகை மியா கலிபா எடுத்த அதிரடி முடிவு- அதிர்ச்சியில் ரசிகர்கள்
பட்ஜெட்டை விட மூன்று மடங்கு வசூல் செய்து பிரம்மாண்ட சாதனை படைத்த அவள்.!
அரவிந்த் சாமி படத்தில் இணைந்த ஆண்ட்ரியா
நேர்காணலில் ஆண்ட்ரியாவிடம் ஆபாசமாக பேசிய தொகுப்பாளருக்கு எதிர்ப்பு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions