சினிமாவில் ஆணாதிக்கம் அதிகமாக உள்ளது - மியா ஜார்ஜ்

Bookmark and Share

சினிமாவில் ஆணாதிக்கம் அதிகமாக உள்ளது - மியா ஜார்ஜ்

‘அமர காவியம்’ படத்தில் ஆர்யாவின் தம்பி சத்யாவுடன் நடித்து பிரபலமானவர் மியா ஜார்ஜ். அதன்பின், ‘வெற்றிவேல்’ படத்தில் சசிகுமார் ஜோடியாக நடித்தார். தினேசுடன் ‘ஒரு நாள் கூத்து’, விஷ்ணுவுடன் ‘இன்று நேற்று நாளை’ ஆகிய படங்களிலும் நடித்துள்ளார். மலையாளத்தில் முன்னணி நடிகையாக இருக்கிறார்.

பெண்களுக்கு எதிரான கொடுமைகள் பற்றி மியா ஜார்ஜ் கூறியதாவது:-

‘‘பெண்களுக்கு சினிமாவில் மட்டுமின்றி எல்லா துறைகளிலுமே அச்சுறுத்தல்கள் உள்ளன. அவர்கள் வீட்டிலும் வெளியிலும் பாதுகாப்பற்ற நிலையில் வாழ வேண்டி இருக்கிறது. வேலை செய்யும் இடங்களில் தொல்லைகளை சந்திக்கிறார்கள்.

பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடுபவர்களை கடுமையாக தண்டிக்க வேண்டும். நடிகையாவதை சிலர் விரும்புவது இல்லை. அப்படிப்பட்டவர்கள் படப்பிடிப்பு நடக்கும் இடங்களுக்கு நேரில் சென்று பார்த்து அதன் பிறகு நடிக்கலாமா? வேண்டாமா? என்பதை முடிவு செய்ய வேண்டும்.

பெண்கள் விருப்பங்களுக்கு யாரும் தடை விதிக்க கூடாது. மலையாள பட உலகில் பெண்களுக்காக தனி அமைப்பை உருவாக்கி உள்ளனர். எல்லா அமைப்புகளுமே நல்லது செய்யத்தான் இருக்கின்றன. 

நான் மலையாள நடிகர் சங்கத்தில்தான் உறுப்பினராக இருக்கிறேன். சினிமாவில் ஆணாதிக்கம் இருக்கிறது. திரைப்பட தொழில் சம்பந்தமான எல்லா வேலைகளையும் அவர்கள்தான் செய்கிறார்கள். சினிமா வியாபாரம் கதாநாயகர்களை சார்ந்துதான் நடக்கிறது.’’ இவ்வாறு மியா ஜார்ஜ் கூறினார்.


Post your comment





Related News
வட சென்னை படத்தில் சர்ச்சை காட்சி-வசனம் நீக்கம்: படக்குழு அறிவிப்பு
எனக்கு அந்த நிலைமைகள் இதுவரை ஏற்படவில்லை - ஆண்ட்ரியா
கவர்ச்சியாக நடிக்க மறுக்கும் ஆண்ட்ரியா
மக்கள் செல்வன் விஜய் சேதுபதி வெளியிட்ட கூத்தன் அறிமுக பாடல்.
நிர்வாணமாக கூட நடிப்பேன், ஆனால்? - பிரபல நடிகை ஓபன் டாக்.!
விஜய் கூட நடிச்சா தான் இதெல்லாம் நடக்குமா? கொடுமை - பிரபல நடிகை ஆவேச பேச்சு.!
கவர்ச்சி நடிகை மியா கலிபா எடுத்த அதிரடி முடிவு- அதிர்ச்சியில் ரசிகர்கள்
பட்ஜெட்டை விட மூன்று மடங்கு வசூல் செய்து பிரம்மாண்ட சாதனை படைத்த அவள்.!
அரவிந்த் சாமி படத்தில் இணைந்த ஆண்ட்ரியா
நேர்காணலில் ஆண்ட்ரியாவிடம் ஆபாசமாக பேசிய தொகுப்பாளருக்கு எதிர்ப்பு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions