காவியத்தலைவனுடன் ஸ்கூபா டைவிங் அடித்த அமரகாவிய நாயகி...!

Bookmark and Share

காவியத்தலைவனுடன் ஸ்கூபா டைவிங் அடித்த அமரகாவிய நாயகி...!

தற்போது மலையாளத்தில் தயாராகி வரும் 'அனார்கலி' படத்தில் பிருத்விராஜ் இதுவரை ஏற்றிராத கதாபாத்திரமாக, ஆழ்கடல் நீச்சல் பயிற்சி தரும் பயிற்சியாளராக நடிக்கிறார்.

'அனார்கலி' என்றதுமே காதல் காவியம் என்றெல்லாம் கற்பனையை அலையவிடாதீர்கள். காமெடியும்  சாகசங்களும் நிறைந்த ஒரு ஜனரஞ்சகமான படம் தான். சாச்சி என்பவர் இயக்கும் இந்தப்படத்தில் பிஜுமேனன் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

இந்தப்படத்தில் கதாநாயகிகளாக 'அமரகாவியம்' புகழ் மியா மற்றும் பிரியல் கோர் இருவரும் நடிக்கிறார்கள்..  இதில் மியா டாக்டர் ஷெரீன் என்கிற கேரக்டரில் நடிக்கிறார்.

லட்சத்தீவுகளில் நடைபெற்ற படப்பிடிப்பில் கலந்துகொண்ட இவர் ஆழ்கடல் நீச்சல் பயிற்சியின்போது தான் இதுவரை பார்த்திராத அல்லது டிஸ்கவரி சேனல்களில் மட்டுமே பார்த்துவந்து அற்புத உயிரினங்களை கண்டு பரவசப்பட்டிருக்கிறார்.

கேப் கிடைத்த நேரமெல்லாம் பிருத்விராஜும் பிஜுமேனனும் குடலில் குதித்து உல்லாச நீச்சல் அடிக்க, இதை பார்த்த மியாவுக்கும் தானும் உடனே கடலில் குதிக்கவேண்டும் என ஆசை எழுந்ததாம். ஆனால் மேக்கப் கலைந்துவிடுமோ என்கிற பயத்தால் ஷூட்டிங் நேரம் போக மற்ற நேரங்களில் உற்சாக நீச்சல்  அடித்து மகிழ்ந்திருக்கிறார் மியா. 


Post your comment





Related News
வட சென்னை படத்தில் சர்ச்சை காட்சி-வசனம் நீக்கம்: படக்குழு அறிவிப்பு
எனக்கு அந்த நிலைமைகள் இதுவரை ஏற்படவில்லை - ஆண்ட்ரியா
கவர்ச்சியாக நடிக்க மறுக்கும் ஆண்ட்ரியா
சினிமாவில் ஆணாதிக்கம் அதிகமாக உள்ளது - மியா ஜார்ஜ்
நிர்வாணமாக கூட நடிப்பேன், ஆனால்? - பிரபல நடிகை ஓபன் டாக்.!
விஜய் கூட நடிச்சா தான் இதெல்லாம் நடக்குமா? கொடுமை - பிரபல நடிகை ஆவேச பேச்சு.!
கவர்ச்சி நடிகை மியா கலிபா எடுத்த அதிரடி முடிவு- அதிர்ச்சியில் ரசிகர்கள்
தறியுடன் நாவல் “சங்கத்தலைவன்“ என்ற பெயரில் திரைப்படமாகிறது
பட்ஜெட்டை விட மூன்று மடங்கு வசூல் செய்து பிரம்மாண்ட சாதனை படைத்த அவள்.!
அரவிந்த் சாமி படத்தில் இணைந்த ஆண்ட்ரியா








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions