போட்டி நடிகைகளான மியா ஜார்ஜ்-கீர்த்தி சுரேஷ்!

Bookmark and Share

போட்டி நடிகைகளான மியா ஜார்ஜ்-கீர்த்தி சுரேஷ்!

அமரகாவியம் மியா ஜார்ஜ், மலையாளத்தில் முன்னணி நடிகை. இவர் நடித்த ஐந்து படங்கள் தொடர்ந்து ஹிட்டடித்துள்ளன. அப்படி அவர் நடித்த படங்கள் முன்னணி ஹீரோக்களின் படங்கள் இல்லை. ஆனால் அத்தனை படத்திலுமே மியாவை சுற்றித்தான் கதை பின்னப்பட்டிருந்ததாம்.

அதனால்தான் தமிழிலும் ஹீரோக்களுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் கதைகளுக்கே முதலிடம் கொடுத்து நடித்து வருகிறார். அந்த வகையில், இன்று நேற்று நாளை படத்தில் விஷ்ணுவுடன் நடித்தவர், இப்போது அட்டகத்தி தினேசுடன் ஒருநாள் கூத்து என்ற படத்தில் கமிட்டாகியிருக்கிறார்.

அதேபோல் இவரைப்போலவே மலையாளத்தில் இருந்து தமிழுக்கு வந்துள்ள கீர்த்தி சுரேஷ், தற்போது இது என்ன மயக்கம், ரஜினி முருகன், பாம்பு சட்டை போன்ற படங்களில் நடித்துக்கொண்டிருக்கிறார். 

ஆனால் இவர்கள் இருவரும் மலையாளத்தில் நடித்து வந்தபோது திரைக்குப்பின்னால் தொழில்முறை போட்டி நடந்து வந்திருக்கிறது. முக்கியமாக, கீர்த்தி சுரேஷ் முயற்சி செய்யும் படங்களை எளிதாக தன்பக்கம் இழுத்திருக்கிறார் மியா.

அப்படி தொடங்கிய இவர்களின் தொழில் போட்டி இப்போதும் தொடர்ந்து கொண்டிருக்கிறதாம்.

அதனால், மலையாளத்தில் மியாவை விட மார்க்கெட்டில் பின்தங்கியே இருந்த கீர்த்தி சுரேஷ், தமிழில் அவரை விட முன்னணி நடிகையாகி விட வேண்டும் என்று வரிந்து கட்டி நிற்கிறார்.

அதோடு, இங்கு பர்பார்மென்ஸை விட கிளாமராக நடித்தால் எளிதில் முன்னணி நடிகர்களுடன் நடிக்கும் அளவுக்கு முன்னேறி விடலாம் என்பதால் ரஜினி முருகன் ரிலீசுக்கு பிறகு விஷால், ஆர்யா போன்ற நடிகர்களுடன் நடிப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார் கீர்த்தி சுரேஷ்.

 


Post your comment





Related News
விக்ரம், விஜய்யை தொடர்ந்து பிரபல நடிகருடன் ஜோடி சேரும் கீர்த்தி சுரேஷ்
சர்கார் கொண்டாட்டம் ஆரம்பம் - பட நிறுவனம் அறிவிப்பு
கீர்த்தி சுரேசை புகழும் சமந்தா
கமல் ரசிகன் என்ற முறையில் அவர் மீது வருத்தம் - படவிழாவில் சுரேஷ் காமாட்சி பேச்சு
எனக்கு அந்த நிலைமைகள் இதுவரை ஏற்படவில்லை - ஆண்ட்ரியா
கவர்ச்சியாக நடிக்க மறுக்கும் ஆண்ட்ரியா
விஜய்யின் சர்கார் இசை வெளியீட்டு விழா பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு
ஜெயலலிதாவாக நடிக்க தைரியம் இல்லை - கீர்த்தி சுரேஷ்
சண்டக்கோழி-2 - மொத்த படக்குழுவுக்கும் இன்ப அதிர்ச்சி கொடுத்த விஷால், லிங்குசாமி
கேரள மழை வெள்ளம் - பிரபு, ஜெயம் ரவி, கீர்த்தி சுரேஷ் நிதியுதவி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions