மியாவின் மார்க்கெட் கிடுகிடு உயர்வு!

Bookmark and Share

மியாவின் மார்க்கெட் கிடுகிடு உயர்வு!

மலையாளத்தில் அரை டஜன் படங்களுக்கு மேல் நடித்து விட்டு கோலிவுட்டுக்கு வந்திருக்கும் மியா ஜார்ஜ்க்கு அமரகாவியம் கைகொடுக்கவில்லை. இருப்பினும் அவரது நடிப்பு பலரை கவர்ந்தது.

குறிப்பாக, அந்த படத்தை தனது தம்பி சத்யாவை வைத்து தயாரித்த ஆர்யாவே, மியாவின் நடிப்பை சில மலையாள படங்களில் பார்த்து வியந்துதான் அந்த படத்துக்கு ஒப்பந்தம் செய்தார்.

அதேபோல், மியாவும் அந்த படத்தில் அழுத்தமான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். சில காட்சிகளில் சத்யா நடிப்பில் பின்வாங்கினபோதும் இவரே பேலன்ஸ் பண்ணி காட்சிகளை நகர்த்தியிருந்தார்.

அதைப்பார்த்து விட்டே இப்போது விஷ்ணு நடிக்கும் இன்று நேற்று நாளை படத்துக்கும் அவரை புக் பண்ணியுள்ளனர். அதனால் இந்த படத்தில் இன்னும் அசத்தலான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறாராம் மியா.

சில காட்சிகளில் சிங்கிள் டேக்கில் அவர் உணர்வுப்பூர்வமாக நடித்ததைப்பார்த்து படப்பிடிப்பு தளத்தில் உள்ளவர்கள் கைதட்டி ஆரவாரம் செய்திருக்கிறார்கள். அதோடு, அவரது நடிப்பை கோலிவுட்டில் உள்ள மற்றவர்களிடம் புகழ்ந்து பேசி வருகிறார்கள்.

அதனால். லட்சுமிமேனனின் மார்க்கெட் சரிந்து விட்ட நிலையில், அவர் இடத்தை பிடிக்க ஸ்ரீதிவ்யா, நந்திதா உள்ளிட்ட நடிகைகள் போராடிக்கொண்டிருக்க, இப்போது லட்சுமிமேனனை மனதில் கொண்டு கதை பண்ணிய டைரக்டர்களோ மியா ஜார்ஜ் பக்கம் திரும்பி நிற்கின்றனர்.

அதனால் இப்போது அவர் நடித்துள்ள படம் வெற்றி பெற்றால் மியாவின் கோலிவுட் மார்க்கெட் கிடுகிடுவென்று உயரும் நிலை ஏற்பட்டிருக்கிறது.


Post your comment





Related News
சினிமாவில் ஆணாதிக்கம் அதிகமாக உள்ளது - மியா ஜார்ஜ்
மியா ஜார்ஜை விரும்பும் ஒரு கோடி ரசிகர்கள்
சூப்பர் ஸ்டார்களை வீழ்த்திய நடிகை மியா ஜார்ஜ்- ரசிகர்கள் மத்தியில் இவருக்கு இவ்வளவு மவுசா
பிரிட்டீஷ் பாடகர் ஜார்ஜ் மைக்கேல் காலமானார்
மம்முட்டியுடன் இணையும் மியா ஜார்ஜ்!
வெற்றிவேல் டிரைலர் மற்றும் பட ரிலீஸ் தேதி அறிவிப்பு!
சசிக்குமார் படத்தை வாங்கிய லைக்கா நிறுவனம் !
விஜய்-60 படத்தில் நடிக்கிறேனா? மியா ஜார்ஜ் விளக்கம்
பாவாடவிலும் பிருத்விராஜுடன் – மியா ஜார்ஜ் ஜோடி
ஆர்யா படத்தில் நடிக்க மறுத்த மியா ஜார்ஜ்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions