மியாவை திடீர் சந்தோஷத்தில் ஆழ்த்திய படக்குழுவினர்..!

Bookmark and Share

மியாவை திடீர் சந்தோஷத்தில் ஆழ்த்திய படக்குழுவினர்..!

'அமரகாவியம்' அழகி மியா தற்போது மலையாளத்தில் '32ஆம் அத்தியாயம் 23ஆம் வாக்கியம்' என்கிற படத்தில் மும்முரமாக நடித்து வருகிறார். ராமகிருஷ்ணன் மற்றும் அர்ஜுன் பிரபாகரன் என்கிற இரட்டை இயக்குனர்கள் இந்தப்படத்தை இயக்குகிறார்கள்.

நேற்று முன்தினம் மியாவின் பிறந்தநாள்.. மியா இதுபற்றி படப்பிடிப்பில் யாரிடமும் எதுவும் சொல்லிக்கொள்ளவும் இல்லை.. ஆனால் அவரது பிறந்தநாள் பற்றி முன்கூட்டியே தெரியவந்த படக்குழுவினர் அவருக்கு சர்ப்ரைஸ் கொடுப்பது என முடிவு செய்தனர்.

பிறந்தநாளன்று வழக்கம்போல் செட்டுக்கு வந்த மியாவிடம் யாரும் பிறந்தநாள் வாழ்த்து கூறவில்லை.. அவருக்கு பிறந்தநாள் என்பதை அறிந்ததாகவே காட்டிக்கொள்ளவும் இல்லை.

பதினோரு மணியளவில் அடுத்த ஷாட் ரெடி என்றதும் ஸ்பாட்டிற்கு வந்த மியா சந்தோஷத்தில் அப்படியே திகைத்து நின்றுவிட்டார். படப்பிடிப்பு குழுவினர் மிகப்பெரிய கேக்கை வரவழைத்திருந்தனர்.

மியாவை கேக் வெட்டவைத்து அதன்பின் அனைவரும் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்தனர். யூனிட்டாரின் இந்த சர்ப்ரைஸ் பார்ட்டியால் நெகிழ்ந்துபோய்விட்டாராம் மியா.


Post your comment





Related News
சினிமாவில் ஆணாதிக்கம் அதிகமாக உள்ளது - மியா ஜார்ஜ்
மியா ஜார்ஜை விரும்பும் ஒரு கோடி ரசிகர்கள்
சூப்பர் ஸ்டார்களை வீழ்த்திய நடிகை மியா ஜார்ஜ்- ரசிகர்கள் மத்தியில் இவருக்கு இவ்வளவு மவுசா
பிரிட்டீஷ் பாடகர் ஜார்ஜ் மைக்கேல் காலமானார்
மம்முட்டியுடன் இணையும் மியா ஜார்ஜ்!
வெற்றிவேல் டிரைலர் மற்றும் பட ரிலீஸ் தேதி அறிவிப்பு!
சசிக்குமார் படத்தை வாங்கிய லைக்கா நிறுவனம் !
விஜய்-60 படத்தில் நடிக்கிறேனா? மியா ஜார்ஜ் விளக்கம்
பாவாடவிலும் பிருத்விராஜுடன் – மியா ஜார்ஜ் ஜோடி
ஆர்யா படத்தில் நடிக்க மறுத்த மியா ஜார்ஜ்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions