உலக இளைஞர்களை "பேய்"த்தனமாக ஆட்டிப்படைத்த மைக்கேல் ஜாக்சனின் "ஆய்"த்தனங்கள்...!

Bookmark and Share

உலக இளைஞர்களை

மைக்கேல் ஜாக்சன் பேய்த்தனமாக ஆடினாலும், பாடினாலும் மெய் மறந்து போய்க் கேட்க தயாராக இருப்போர் இன்றளவும் கோடிக்கணக்கில் உள்ளனர். ஆனால் அவர் செய்த ஆய்த்தனமான வேலைகளைப் பற்றிக் கேள்விப்படும்போது அப்படியே குமட்டிக் கொண்டு வருகிறது.

ஹாலிவுட்டிலேயே சுத்தபத்தமில்லாத மனிதர் ஜாக்சன்தான் என்கிறார்கள். அப்படி ஒரு அசுத்தமான சூழல் அவரது வீட்டில் நிலவியதாம். ஜாக்சனின் இந்த குமட்டல் மேட்டர்களை அவரது வீட்டில் ஹவுஸ் கீப்பர்களாக இருந்தவர்கள் வெளியிட்டுள்ளனர். அய்யோ என்று ஜாக்சனைப் பற்றி சிலாகித்துப் பேசியவர்கள் இதைக் கேட்டால் அயயே என்று முகம் சுளிப்பார்கள். அப்படி இருக்கிறது ஒவ்வொரு விஷயமும்...!

மூக்கைப் பொத்துனாப்ல மூடிக்கிட்டு வாங்க.. ஜாக்சன் வீட்டுக்குள்ள போய்ட்டு வருவோம்!ஜாக்சன் வசித்த நெவர்லேன்ட் வீடு அசுத்தத்தின் தலைநகராக இருந்திருக்கிறது. வீடு சுத்தமாகவே இருக்காதாம். காரணம், ஜாக்சனின் செயல்பாடுகள். அசுத்தமான சூழலில்தான் அவர் வசித்து வந்துள்ளார்.

மெய்ட் நம்பர் 1:

என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொண்ட முன்னாள் ஹவுஸ்கீப்பர் பெண்மணி கூறுகையில், ஜாக்சன் திடீரென தனது வீட்டு வளாகத்தில் உள்ள குதிரை உள்ளிட்ட விலங்குகளிடம் பொழுதைக் கழிப்பார். மேலும் வீட்டுக்குள்ளும் அவற்றைக் கூட்டிச் செல்வார்.

திடீரென்று கோபம் வந்தால் தனது ஊழியர்களைப் பார்த்து உன் மீது எனது மலத்தை எடுத்து எறிந்து விடுவேன் என்று கோபமாகக் கூறுவார்.ஜாக்சனுக்கு எலி என்றால் பிடிக்குமாம். இதனால் எலிகளையும் வீட்டில் வளர்த்து வந்துள்ளார்.

மெய்ட் நம்பர் 2:

என்ற பெண்மணி கூறுகையில், ஜாக்சன் ஒரு பழைய, நைந்து போன டயாப்பரை பத்திரப்படுத்தி பாதுகாத்து வந்தார். அது ஒரு பெண் குழந்தை பயன்படுத்தியது என்று கருதுகிறேன்.

1993ம் ஆண்டு ஓப்ரா வின்பிரே ஜாக்சனை வந்து சந்தித்து ஒரு பேட்டி எடுத்தார். அவர் பேட்டி எடுத்து விட்டு சென்ற அடுத்த நாள் தனது வீட்டு வாசலிலேயே சிறுநீர் கழித்தார் ஜாக்சன்.

நாங்கள் இருக்கிறோமே என்று சற்றும் சங்கோஜப்படாமல் பேன்ட் ஜிப்பைக் கழற்றி சிறுநீர் போனார் ஜாக்சன். அந்த இடமே நாஸ்தியாகி விட்டது. நாங்கள்தான் கஷ்டப்பட்டு அதைச் சுத்தம் செய்தோம்.

மெய்ட் நம்பர் 3:

என்பவர் கொடுத்த தகவல் என்னவென்றல், ஹாலிவுட்டிலேயே மிகவும் அழுக்கான, அசுத்தமான, அசிங்கமான குணங்களைக் கொண்டவர் ஜாக்சன்தான். இதை நான் அடித்துக் கூறுவேன்.

ஜாக்சனின் சுகாதாரக் கவனமின்மை காரணமாக வீட்டில் ஏகப்பட்ட கரப்பான் உள்ளிட்ட பூச்சிகள் இருந்தன. அவரது படுக்கையிலும் கூட மூட்டைப் பூச்சிகளை நிறையப் பார்க்க முடியும்.

அவரது படுக்கை அறைக்குள் போகவே முடியாது. அவ்வளவு நாற்றமாக இருக்கும். யாருமே உள்ளே போகவே தயங்குவார்கள் என்றார் அவர். ஆஹாஹா அமெரிக்கா.. ஜாக்சன்.. பாப் சிங்கர்.. டாப் சிங்கர்.. இதையெல்லாம் தவிடு பொடியாக்குவது போல இருக்கிறதே இந்த ஹவுஸ்கீப்பர்களின் கூற்று?!


Post your comment
About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions