மாடல் அழகியை மானபங்கம் செய்ததாக இந்திப்பட பாடகர் மீது வழக்குப்பதிவு!

Bookmark and Share

மாடல் அழகியை மானபங்கம் செய்ததாக இந்திப்பட பாடகர் மீது வழக்குப்பதிவு!

மும்பை அந்தேரியில் வசித்து வருபவர் மிகா சிங் (வயது39). இந்திப்பட பாடகர். இவர் மாடல் அழகி ஒருவருக்கு சினிமாவில் நடிக்க வாய்ப்பு வாங்கி தருவதாக கூறியுள்ளார்.

இது தொடர்பாக அந்த பாடகர் வீட்டுக்கு மாடல் அழகி அடிக்கடி சென்று வந்துள்ளார். ஆனால் அவர் கூறியபடி மாடல் அழகிக்கு சினிமாவில் நடிக்க வாய்ப்பு வாங்கி கொடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.

இதனால் பாடகர் மீது மாடல் அழகி ஆத்திரம் அடைந்தார். இதுபற்றி சம்பவத்தன்று பாடகர் வீட்டுக்கு சென்று கேட்டபோது, இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் பாடகர் மிகா சிங் மீது மாடல் அழகி மும்பை வெர்சோவா போலீசில் மானபங்க புகார் கொடுத்துள்ளார். அதில் மிகா சிங், தனது தலைமுடியை பிடித்து இழுத்து தள்ளி விட்டதாகவும், தாக்கியதாகவும் தெரிவித்து உள்ளார்.

இதன் பேரில் போலீசார் பாடகர் மிகா சிங் மீது மானபங்கம் உள்பட மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், மாடல் அழகியின் இந்த புகாரை பகிரங்கமாக மறுத்துள்ள மிகா சிங் அதே போலீஸ் நிலையத்தில் தன் மீது மாடல் அழகி பொய் புகார் கொடுத்துள்ளதாக புகார் செய்திருக்கிறார்.

மேலும் இதுபற்றி மிகா சிங் கூறுகையில், “சம்பவத்தன்று அதிகாலை 5 மணியளவில் சம்பந்தப்பட்ட மாடல் அழகி ஜன்னல் வழியாக எனது வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்தார். பின்னர் அவர் என்னை திட்டி, தாக்கவும் செய்தார். இதை தடுக்க முயன்ற எனது வீட்டு வேலைக்காரர்களையும் மிரட்டினார். மேலும் ரூ.5 கோடி தர வேண்டும் என்றும், இல்லையெனில் போலீசில் பொய் புகார் கொடுத்து உன் வாழ்க்கையை நாசப்படுத்தி விடுவேன் என்றும் தன்னை மிரட்டினார். இந்த பெண் யார் என்றே எனக்கு தெரியாது” என்றார்.


Post your comment





Related News
விஜய் படத்தை எதிர்பார்க்கும் ராஷ்மிகா
ரகுல் ப்ரீத் சிங்கின் இன்ஸ்டாகிராமை முடக்கிய மர்ம நபர்
சினிமாவில் நடிக்க காதல் திருமணத்தை நிறுத்திய நடிகை
ரன்வீர் சிங் - தீபிகா படுகோனே திருமண ஏற்பாடுகள் தீவிரம்
சமந்தாவின் U Turn படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்..!
"எம். ஜி. ஆர்" திரைப்படத்தின் 'டீஸர்' வெளியீடு
ஸ்ரீரெட்டி சர்ச்சைக்கு பதிலளித்த நடிகை காஜல்! என்ன சொன்னார் பாருங்கள்..
விஜய்யின் மெர்சல் செய்த பிரம்மாண்ட சாதனை! அதிகாரப்பூர்வ அறிவிப்பு
கோ, அஞ்சான் பட நடிகைக்கு ரோட்டில் நடந்த பரிதாப சம்பவம்!
பிரபல நடிகரின் படத்தில் ஐட்டம் பாடலுக்கு நடனமாடும் ரகுல் பிரீத் சிங்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions