தெலுங்கில் டப்பாகும் ஜெயம்ரவியின் மிருதன்

Bookmark and Share

தெலுங்கில் டப்பாகும் ஜெயம்ரவியின் மிருதன்

2015-ம் ஆண்டில் தொடர் வெற்றிகளை கொடுத்த ஜெயம் ரவி தற்போது நடித்து முடித்துள்ள படம் ‘மிருதன்’. இப்படம் வருகிற பிப்ரவரி 12-ந் தேதி வெளிவரவிருக்கிறது. ‘ஜோம்பி’ பாணியில் உருவாகியுள்ள இப்படம் தமிழ் சினிமாவுக்கு புதிது.

இப்படத்தை ஐங்கரன் நிறுவனம் வெளியிடவிருக்கிறது. தமிழகத்தில் சுமார் 300 திரையரங்குகளில் இப்படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளனர். 

இந்நிலையில், இப்படத்தை தெலுங்கில் டப் செய்து வெளியிட படக்குழுவினர் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. தெலுங்கு வெளியீட்டு உரிமையை லட்சுமி பிரசன்னா பிலிம்ஸ் நிறுவனம் வாங்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது. தமிழில் வெளியாகும் அதே தினத்தில் தெலுங்கிலும் வெளியிட முடிவு செய்துள்ளனர். 

‘மிருதன்’ படத்தை ‘நாய்கள் ஜாக்கிரதை’ படத்தை இயக்கிய சக்தி சௌந்தரராஜன் இயக்கியுள்ளார். இப்படத்தில் ஜெயம் ரவி டிராபிக் போலீசாக நடித்துள்ளார். இவருக்கு ஜோடியாக லட்சுமி மேனன் நடித்துள்ளார்.

இமான் இசையமைத்துள்ளார். இப்படத்தின் பாடல்களும், டிரைலரும் சமீபத்தில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.


Post your comment





Related News
ஜெயம் ரவி படத்திற்கு கிடைத்த மாபெரும் கெளரவம்
மிருதன் கூட்டணியில் முதல்முறையாக தமிழில் உருவாகும் ஸ்பேஸ் படம்!
வெற்றிகரமான 25-வது நாள் கொண்டாட்டத்தில் மிருதன்!
மீண்டும் புதிய கதையுடன் இணையும் மிருதன் படக்குழுவினர்!
மிருதன் படத்தின் வசூல் நிலவரத்தை வெளியிட்ட ஜெயம்ரவி!
சேதுபதி, மிருதன் சென்னை பாக்ஸ் ஆபிஸ் வசூல் விவரம்!
பிரமிக்க வைக்கும் மிருதனின் முதல்நாள் வசூல்!
மிருதன், சேதுபதி இணையத்தில் வெளியானதால் படக்குழுவினர் அதிர்ச்சி!
மிருதன் 2ம் பாகத்தின் வில்லன் ஜெயம்ரவி?
நாளை உலகம் முழுவதும் பிரமாண்டமாக ரிலீஸாகும் மிருதன்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions