தமிழில் எப்படி மிதுன் சக்கரவர்த்தி நடிக்க சம்மதித்தார்!

Bookmark and Share

தமிழில் எப்படி மிதுன் சக்கரவர்த்தி நடிக்க சம்மதித்தார்!

முன்று முறை தேசிய விருது பெற்றவர், வருமான வரியை முறையாகச் செலுத்தும் நடிகர், சுய கட்டுப்பாடுள்ள நடிகர் என்றெல்லாம் பெயரெடுத்துள்ளவர் மிதுன் சக்ரவர்த்தி. தனக்கு பிடித்தால் மட்டுமே நடிக்க ஒப்புக் கொள்பவர் என்று அறியப்பட்டவர்.

அவரை இந்தியில் நடிக்க வைத்த பின் நேரடித் தமிழில் நடிக்க வைக்க மணிரத்னம்  கூட முயன்றார். தமிழில் அமையவில்லை. பலர் கேட்டும் தவிர்த்து விட்டார். இந்நிலையில் ஒரு புதுமுக இயக்குநரான சத்யபிரபாஸ் இயக்கும் யாகாவாராயினும் நாகாக்க படத்தில் நடிக்கச் சம்மதித்து நடித்துக் கொடுத்து பாராட்டியும் உள்ளார்.

என்றால் அது புதிய செய்திதானே? மிதுன் சக்கரவர்த்தியிடம் அப்படிக் கதை சொல்லி நடிக்க வைத்த அனுபவம் பற்றி இயக்குநர் சத்யபிரபாஸ் கூறும் போது, "முதலில் நான் நடிக்கக் கேட்ட போது மறுத்தார். ஏன் தம்பி இப்படிப் பலரும் என்னிடம் கேட்டார்கள். மறுத்து விட்டேன் இப்போது இந்தியில் மட்டும் தான் நடித்து வருகிறேன் என்று தவிர்க்கவே பார்த்தார்.

நடிக்க நிர்ப்பந்தம் எதுவுமில்லை. ஒரு முறை நான் சொல்கிற கேரக்டர் பற்றி மட்டும் கேளுங்கள் என்று 20 நிமிடம்தான் கதை சொல்லியிருப்பேன் கேட்டார்.ஆனால் ஒன்றரை மணிநேரம் கேள்வி கேட்டார். சந்தேகம் கேட்டார். எல்லாவற்றுக்கும் பதில் சொன்னேன். கட்டிப் பிடித்து பாராட்டினார்.

எத்தனைநாள் கால்ஷீட் வேணும் என்றார். 16 நாள் போதும் என்றேன். 25 நாள் தருகிறேன். உன் மனதில் ஓடும் படத்தை எடு. நான் நிறைய புதுமுக இயக்குநர்களை அறிமுகம் செய்திருக்கிறேன். உன்னையும் அதில் சேர்த்துக் கொள்கிறேன் . நான் சம்பளம் எல்லாம் பேசமாட்டேன் பிடித்தால் மட்டும் நடிப்பவன் நான். என்றார் இரண்டே நாளில் பேச்சு வார்த்தை முடிந்தது.

அவர் கேரக்டர் மும்பையில் இருக்கும், எனவே அவர் தொடர்பான படப்பிடிப்பு முழுக்க மும்பையில்தான் நடந்தது. நடித்து முடித்து மகிழ்ச்சியுடன் விடைபெற்றார். இது எனக்கு மகிழ்வான திருப்தியான அனுபவம் " என்கிறார் இயக்குநர்.

 


Post your comment





Related News
தனது மகளை சினிமாவில் அறிமுகப்படுத்திய சிவகார்த்திகேயன்
படத்தொடக்கவிழாவில் நடந்த வளைகாப்பு வைபவம் - ஒரு புதுமையான சினிமா விழா..!
சினிமாவில் ஆணாதிக்கம் அதிகமாக உள்ளது - மியா ஜார்ஜ்
மீண்டும் இணையும் இயக்குனர் சுசீந்திரன், யுவன் வெற்றிக்கூட்டணி..!
மக்கள் செல்வன் விஜய் சேதுபதி வெளியிட்ட கூத்தன் அறிமுக பாடல்.
பிரபல நடிகருக்கு ஜோடியாகும் நாகினி சீரியல் கவர்ச்சி நடிகை!
தமிழாற்றுப்படை : செயங்கொண்டார் குறித்து கவிஞர் வைரமுத்து கட்டுரை அரங்கேற்றுகிறார்
சிம்புவால் மாறிய வெங்கட் பிரபு- இனிமே இப்படிதானா
சுரேஷ் காமாட்சியின் வி ஹவுஸ் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் சிம்பு- வெங்கட் பிரபு கூட்டணியின் "மாநாடு"!!!
மூன்று சூப்பர் ஹீரோக்கள் வெளியிட்ட '' வேட்டை நாய்'' டீசர் !








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions