எமன் படத்தில் நடித்தது ஏன்…? - மியா ஜார்ஜ் விளக்கம்

Bookmark and Share

எமன் படத்தில் நடித்தது ஏன்…? - மியா ஜார்ஜ் விளக்கம்

விஜய் ஆண்டனி - மியா ஜார்ஜ் நடிப்பில், ஜீவா சங்கர் இயக்கி இருக்கும் திரைப்படம் 'எமன்'.

ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வரும் இந்த 'எமன்' திரைப்படத்தை, 'லைக்கா புரொடக்ஷன்ஸ்' சார்பில் ராஜு மகாலிங்கம் மற்றும் 'விஜய் ஆண்டனி பிலிம் கார்பொரேஷன்' சார்பில் பாத்திமா விஜய் ஆண்டனி ஆகியோர் இணைந்து தயாரித்து இருக்கின்றனர்.

அமரக்காவியம்' முதல் சமீபத்தில் வெளியான 'ரம்' திரைப்படம் வரை, முற்றிலும் வித்தியாசமான கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து வரும் மியா ஜார்ஜ் கதாநாயகியாக நடித்து வரும் இந்த 'எமன்' திரைப்படம் வருகின்ற பிப்ரவரி 24 ஆம் தேதி அன்று வெளியாக இருப்பது குறிப்பிடத்தக்கது.   

"எமன் படத்தில் நான் நடித்ததற்கு இரண்டு முக்கிய காரணங்கள் இருக்கின்றது. ஒன்று, என்னை தமிழ் திரையுலகிற்கு அறிமுக படுத்திய இயக்குநர் ஜீவா சங்கர், மற்றொன்று, எப்போதுமே தனித்துவமான தரமான கதைகளை மட்டுமே தேர்ந்தெடுத்து நடித்து வரும் விஜய் ஆண்டனி.

ஜீவா சங்கரோடு நான் இணைந்து பணியாற்றி இருக்கும் இரண்டாவது படம் 'எமன்'. 'அமரக்காவியம்' படத்தில் இருந்து முற்றிலும் மாறுபட்ட ஒரு கதாபாத்திரத்தில்  தான்  நான் இந்த 'எமன்' படத்தில் நடித்து இருக்கின்றேன்.

விஜய் ஆண்டனி ஒரு எளிமையான மனிதர். நடிப்பிற்காக தன்னை முழுமையாக அர்ப்பணித்து  கொண்டு, 24 மணி நேரமும் அயராது உழைக்கும் அவரோடு இணைந்து பணியாற்றியதில் எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கின்றது. 

'எமன்' படத்தில் நான் அஞ்சனா என்னும்  ஒரு நடிகையின் கதாபாத்திரத்தில்  நடித்து இருக்கின்றேன். அதுமட்டுமின்றி. இந்த படத்தில் எனக்கு முதல் முறையாக ஒரு பிரத்யேகமான பாடல் வழங்கப்பட்டு  இருக்கின்றது.

அந்த பாடல் என்னை முற்றிலும் ஒரு மாறுபட்ட மியா ஜார்ஜாக ரசிகர்களுக்கு பிரதிபலிக்கும்" என்று உற்சாகத்துடன் கூறுகிறார் 'எமன்' படத்தின் கதாநாயகி மியா ஜார்ஜ்.

அரசியலை மையமாக கொண்டு உருவாகி இருக்கும் 'எமன்' திரைப்படம் வருகின்ற பிப்ரவரி 24 ஆம் தேதி, தமிழ் மற்றும் தெலுங்கில் ஒரே சமயத்தில் வெளியாக இருப்பது குறிப்பிடத்தக்கது.


Post your comment





Related News
விஜய் ஆண்டனியின் திமிரு புடிச்சவன் படத்துக்கு யு/ஏ சான்றிதழ்!
“காவியனுக்கு போட்டியாக “சர்கார்“
கருணாநிதி உடல்நலம் பற்றி மு.க.ஸ்டாலினிடம் கேட்டறிந்தார் நடிகர் விஜய் ஆண்டனி
விஜய் ஆண்டனி - அர்ஜுன் கூட்டணியில் விருவிருவென வளர்ந்து வரும் "கொலைகாரன்"
நிவின் பாலி படத்துக்கு வசனம் எழுதும் மதன் கார்கி..!
விசுவாசம் இசையமைப்பாளரின் அதிரடியான முடிவு!
நடனத்தை மையப்படுத்தி உருவாகும் லஷ்மி
மூன்று சூப்பர் ஹீரோக்கள் வெளியிட்ட '' வேட்டை நாய்'' டீசர் !
கொலைகாரனுடன் இணைந்த அர்ஜுன்
விஜய் ஆண்டனியின் காளி ரிலீஸ் தேதி அறிவிப்பு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions