குருவின் வழியில் மோகன் பாபு....

Bookmark and Share

குருவின் வழியில் மோகன் பாபு....

பிரபல எழுத்தாளர், பாடலாசிரியர், வசனகர்த்தா, இயக்குனர் மற்றும் தயாரிப்பாளரான தர்சகரத்னா தாசரி நாராயண ராவ் சிறு பட்ஜெட் படங்களை தயாரிக்கும் தயாரிப்பாளர்களை எப்போதுமே சப்போர்ட் செய்வது வழக்கமாக கொண்டவர்.

எந்த விழாவில் கலந்துகொண்டாலும் அவர்களை புகழ்ந்து பேசுவார் சிறு பட்ஜெட் படங்களை சப்போர்ட் பண்றது மிக அவசியம் என்பார். சில நேரங்களில் பெரிய பட்ஜெட் தயாரிப்பாளர்களை பற்றி தேவை இல்லாமல் தூற்றுவதும் உண்டு.

இந்த சிறு பட்ஜெட்டில் படங்களை தயாரிக்கும் தயாரிப்பாளர் தற்போது அதிசயமாக பவர் ஸ்டார் பவன் கல்யாண் ஹீரோவாக வைத்து பெரிய பட்ஜெட்டில் படம் தயாரிக்கபோகிறார்.

இந்நிலையில் தாசரியின் சிஷ்யரான பிரபல மூத்த நடிகரான மோகன்பாபு தன்னுடைய குருவின் வழியில் செயல்படுகிறார். சமீபத்தில் தன்னுடைய மகளும், நடிகை மற்றும் தயாரிப்பாளருமான லக்ஷ்மி மஞ்சு நடித்து, தயாரித்த தொங்காடா படத்தின் சக்சஸ் மீட்டில் கலந்துகொண்டார்.

அப்போது அவர் பெரிய பட்ஜெட் படங்களை தயாரிக்கும் தயாரிப்பாளர்களைவிட சின்ன படங்களை தயாரிக்கும் தயாரிப்பாளர்களே உண்மையான தயாரிப்பாளர்கள் என்று கூறினார். அதுமட்டுமின்றி பெரிய தயாரிப்பாளர்கள் நடிகை நடிகர்களுக்கு சரியாக சம்பளம் தருவது இல்லை என்றும் குற்றம் சாட்டினார். 


Post your comment





Related News
எமனாக மாறும் யோகிபாபு
யோகி பாபு படத்தில் கனடா மாடல்
ரஜினியுடன் நடிப்பது மகிழ்ச்சி - மாளவிகா மோகனன்
விஜய் இடத்தில் பிரசன்னா இருந்திருந்தால் பிரச்சனை பண்ணியிருப்பார் - யோகி பாபு
நடிகர் மகேஷ் பாபுவை கிண்டல் செய்த காமெடி நடிகரால் ரசிகர்கள் மோதல்
கேரள கன்னியாஸ்திரி விவகாரம் - பத்திரிகையாளரிடம் மன்னிப்பு கேட்ட நடிகர் மோகன் லால்
கதாநாயகனாக களமிறங்கும் யோகி பாபு
அர்ஜுன், ஜெகபதி பாபு, ஜாக்கி ஷெராப் நடிக்கும் படத்தின் ஹீரோ யார்?
முக்கியமான நாளில் அடுத்த பட அறிவிப்பை வெளியிட்ட மோகன் ராஜா
ஜெயலலிதா வாழ்க்கைப் படத்தில் கமல்ஹாசன், மோகன்லால்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions