ரஜினிகாந்த் நண்பர் மோகன் பாபு அரசியலில் களம் இறங்குகிறார்!

Bookmark and Share

ரஜினிகாந்த் நண்பர் மோகன் பாபு அரசியலில் களம் இறங்குகிறார்!

நடிகர் ரஜினிகாந்தின் நெருங்கிய நண்பரும் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகருமான மோகன்பாபு என்.டி.ராமராவ் காலத்தில் தெலுங்கு தேசம் கட்சி எம்.பி.யாக இருந்தார்.

என்.டி.ராமராவ் மறைவுக்கு பின் அவர் அரசியலில் இருந்து ஒதுங்கி இருந்தார். இப்போது அவர் மீண்டும் அரசியலில் குதிக்க முடிவு செய்து உள்ளார்.

திருப்பதி அருகே ரங்கம் கேட்டையில் உள்ள தனது வித்யா நிகேதன் கல்லூரியில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மோகன்பாபு நிருபர்களிடம் கூறியதாவது:–

தற்போதைய அரசியல் சூழ்நிலையில் ஏழை மக்களுக்கு எதிராக அநியாயம் நடக்கிறது. இதனை பார்த்துக் கொண்டு சும்மா இருக்க முடியவில்லை. அவர்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று எண்ண தோன்றுகிறது.

அதனால் நான் அரசியலுக்கு வர இருக்கிறேன். நான் ஆவேசக்காரன்தான். ஆனால் ஊழல் வாதி அல்ல. இந்த மோகன்பாபு பற்றி எல்லோருக்கும் தெரியும். எனக்கு சாதி, மதம் கிடையாது. எல்லோரும் என்னை வரவேற்பார்கள்.

முதல்–மந்திரி சந்திரபாபு நாயுடுவும், எதிர்கட்சி தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி இருவரும் எனக்கு உறவினர்கள்தான். இதில் எந்த கட்சியில் சேருவேன் என்று விரைவில் அறிவிப்பேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் சிலர் தெலுங்கு தேசம் கட்சிக்கு தாவியதை மோகன் பாபு கண்டித்து உள்ளார். எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்து விட்டு கட்சி மாறினால் பரவாயில்லை. அதை விடுத்து ஒரு கட்சியில் நின்று எம்.எல்.ஏ.வாக வெற்றி பெற்று விட்டு அப்படியே கட்சி மாறுவது ‘எச்சில் சோறை சாப்பிடுவது போல்’ என்று அவர் கடுமையாக விமர்சித்தார்.

அதோடு அரசாங்கம் தனது கல்லூரிக்கு ரூ.8 கோடி கல்வி கட்டணம் தராமல் பாக்கி வைத்து உள்ளது. நான் சம்பாதித்த பணத்தில் இருந்து கல்லூரி ஆசிரியர்களுக்கு சம்பளம் கொடுத்து வருகிறேன்’’ என்றும் அவர் கூறினார்.

இதனால் மோகன்பாபு ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியில் சேருவார் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டு உள்ளது.


Post your comment





Related News
ரஜினியுடன் நடிப்பது மகிழ்ச்சி - மாளவிகா மோகனன்
கேரள கன்னியாஸ்திரி விவகாரம் - பத்திரிகையாளரிடம் மன்னிப்பு கேட்ட நடிகர் மோகன் லால்
முக்கியமான நாளில் அடுத்த பட அறிவிப்பை வெளியிட்ட மோகன் ராஜா
ஜெயலலிதா வாழ்க்கைப் படத்தில் கமல்ஹாசன், மோகன்லால்
ஆகஸ்ட் 31 முதல் விக்ரம் பிரபுவின் 60 வயது மாநிறம்
ஜோதிகாவின் “காற்றின் மொழி“ படத்தில் இடம்பெறும் உலக புகழ் பெற்ற ”ஜிமிக்கி கம்மல்“ பாடல்..!
மாரி 2 படத்தில் இணைந்த பிரபலம், எகிறும் எதிர்பார்ப்பு.!
ஒரே ஷெட்யுலில் ” காற்றின் மொழி “ ஷூட்டிங்கை முடித்தார் ஜோதிகா !
பாரிஸ் பாரிஸ் படப்பிடிப்பு முடிவடைந்தது - அக்டோபர் வெளியிடு
பாகுபலி பாணியில் உருவாகியுள்ள மோகன்லால், நிவின் பாலியின் காயம்குளம் கொச்சூன்னி.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions