பாடல் காட்சிக்காக கதை சொல்லும் இயக்குனர்

Bookmark and Share

பாடல் காட்சிக்காக கதை சொல்லும் இயக்குனர்

நமது இயக்குனர்கள் எடுக்கும் படத்தில் கதை இருக்கிறதோ இல்லையோ, படம் எடுத்த காட்சியை பற்றி சொல்லும் போது விடும் கதை அற்புதமாக இருக்கும்.

அந்த வகையில் அச்சாரம் படத்தின் இயக்குனர் மோகன் கிருஷ்ணா ஒரு கதை விடுகிறார்.

தமிழக வனப்பகுதியில் படமாக்க அனுமதிப்பெற்று கேரளாப்பகுதிக்கு ஐந்து மணி நேரம் நடந்து சென்று கொடைக்கானல் வனப்பகுதியை தாண்டி படமாக்கும் போது வனத்துறையினர் தடுத்துவிட்டார்களாம்.

உடனே அங்கிருந்து திரும்பவும் ஐந்து மணிநேரம் வாகனங்கள் எதுவும் இல்லாமல் நடந்தே வந்துள்ளனர். பிறகு வேறு ஒரு இடத்தை தேர்வு செய்து படபிடிப்புக்கு ஆயத்தமாகும் போது அங்கே கொடூரமான வனவிலங்குகள் இருக்கிறது.

போனால் உயிருக்கு ஆபத்து என்று கூறியதும் அங்கேயும் படபிடிப்பு நடத்தாமல் திரும்பியுள்ளனர். பின்னர் பழமுதிர் என்ற இடத்தில் நாயகன் முன்னாவும் இடையழகி பூனம்கவூரும் கட்டிப்பிடித்து ஆடும் பாடல் காட்சியை படமாக்கியுள்ளனர்.

எனக்கு மட்டுமே இடுப்பு சொந்தம் என்று உரிமை கொண்டாடும் பூனத்தை மனதில் வைத்து பேரழமே திருடிட பிறந்தவன் நீதான் என்ற பாடலை யுகபாரதி எழுதி கொடுத்திருக்கிறார்.

இதை இளமை துள்ளலோடு படமாக்கி கொடுத்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் ஆர்.கே. பிரதாப். படபிடிப்பு முடிந்து விட்டதாம். இதில் இன்னொரு விஷயம் பாதி நடிகர்களுக்கு அச்சாரம் படத்தில் நடிக்க அச்சாரம் கொடுத்ததோடு சரியாம் மீதி தொகை இன்னும் கிடைக்கவில்லையாம்.


Post your comment





Related News
ரஜினியுடன் நடிப்பது மகிழ்ச்சி - மாளவிகா மோகனன்
கேரள கன்னியாஸ்திரி விவகாரம் - பத்திரிகையாளரிடம் மன்னிப்பு கேட்ட நடிகர் மோகன் லால்
பிரபல நடிகர் ஹரி கிருஷ்ணா கார் விபத்தில் மரணம்
முக்கியமான நாளில் அடுத்த பட அறிவிப்பை வெளியிட்ட மோகன் ராஜா
ஜெயலலிதா வாழ்க்கைப் படத்தில் கமல்ஹாசன், மோகன்லால்
ஆகஸ்ட் 31 முதல் விக்ரம் பிரபுவின் 60 வயது மாநிறம்
கழுகு - 2 படத்தின் டப்பிங் தொடங்கியது..!
'கழுகு-2' படத்தை தொடர்ந்து கிருஷ்ணா நடிக்கும் 'திரு.குரல்'..!
படத்தொடக்கவிழாவில் நடந்த வளைகாப்பு வைபவம் - ஒரு புதுமையான சினிமா விழா..!
ஜோதிகாவின் “காற்றின் மொழி“ படத்தில் இடம்பெறும் உலக புகழ் பெற்ற ”ஜிமிக்கி கம்மல்“ பாடல்..!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions