மோகன்லாலுக்காக லீகல் த்ரில்லர் கதை எழுதும் அனூப் மேனன்..!

Bookmark and Share

மோகன்லாலுக்காக லீகல் த்ரில்லர் கதை எழுதும் அனூப் மேனன்..!

மலையாள திரையுலகில் நடிகர், இயக்குனர் என இரண்டு தளங்களையும் சரியாக பேலன்ஸ் செய்து வருபவர் நடிகர் அனூப் மேனன்..

படத்தில் இவர் கெஸ்ட் ரோலில் நடித்தாலே தங்களது படத்திற்கு அது பெரிய பலம் நினைக்கும் பல இயக்குனர்களும் இவரை தங்கள் படத்தில் நடிக்க வைக்க முட்டி மோதினாலும், தனது கதாசிரியர் பணியை அது பாதிக்க கூடாது என்பதால் அளவான படங்களிலேயே நடித்து வருகிறார் அனூப் மேனன்.

கடந்த வருடத்தில் ஹிட்டடித்த  மற்றும் விக்ரமாதித்யன் படங்களில் இவர் நடிப்பை பார்த்தவர்கள் இதை எந்த மறுப்பும் இல்லாமல் ஒப்புக்கொள்வார்கள்.

ஜனரஞ்சகமாக கதைகள் தயார் பண்ணும் அனூப் மேனன் இப்போது முழுக்க முழுக்க சட்ட நுணுக்கங்களை, சட்டத்தின் ஓட்டைகளை வைத்து லீகல் த்ரில்லராக ஒரு படம் பண்ணவேண்டும் என்கிற முயற்சியில் இறங்கியுள்ளார். இதற்காக அவர் சட்ட நிபுணர்கள் யாரையும் அணுகப்போவதில்லை.. காரணம் அவரே சட்டம் படித்தவர்தான்.

இதில் அவரது கல்லூரி காலத்தில் நடைபெற்ற நிகழ்வுகளையும் திரைக்கதையில் சேர்க்க இருக்கிறாராம். இந்தக்கதையை மோகன்லாலுக்காக எழுதுகிறார் என்பது மட்டும் இப்போதைக்கு வெளியில் தெரியும் செய்தி..


Post your comment





Related News
கேரள கன்னியாஸ்திரி விவகாரம் - பத்திரிகையாளரிடம் மன்னிப்பு கேட்ட நடிகர் மோகன் லால்
முக்கியமான நாளில் அடுத்த பட அறிவிப்பை வெளியிட்ட மோகன் ராஜா
ஜெயலலிதா வாழ்க்கைப் படத்தில் கமல்ஹாசன், மோகன்லால்
ஆகஸ்ட் 31 முதல் விக்ரம் பிரபுவின் 60 வயது மாநிறம்
சினிமாவில் எந்த விதமான குணச்சித்திர பாத்திரங்களில் நடிப்பதற்கு தயாராக இருக்கிறேன்..! - லதா ராவ்
ஜோதிகாவின் “காற்றின் மொழி“ படத்தில் இடம்பெறும் உலக புகழ் பெற்ற ”ஜிமிக்கி கம்மல்“ பாடல்..!
மாரி 2 படத்தில் இணைந்த பிரபலம், எகிறும் எதிர்பார்ப்பு.!
மீண்டும் இணையும் இயக்குனர் சுசீந்திரன், யுவன் வெற்றிக்கூட்டணி..!
ஒரே ஷெட்யுலில் ” காற்றின் மொழி “ ஷூட்டிங்கை முடித்தார் ஜோதிகா !
பாரிஸ் பாரிஸ் படப்பிடிப்பு முடிவடைந்தது - அக்டோபர் வெளியிடு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions