முதலில் துவங்கிய மோகன்லால் ஓணம்!

Bookmark and Share

முதலில் துவங்கிய மோகன்லால் ஓணம்!

கேரளாவில் ஓணம் திரையுலக கொண்டாட்டத்தை மோகன்லால், தனது லோஹம் படத்தை ஒருவாரம் முன்னதாக ரிலீஸ் செய்வதன் மூலம் முதல் ஆளாக ஓணம் 
கொண்டாட்டத்தை தொடங்கி வைத்துள்ளார்.  இப்படத்தில் மோகன்லால் - ரஞ்சித் கூட்டணியில் உருவாகியிருக்கும் பரபர ஆக்சன் படம்.. மோகன்லாலுடன் முதன்முறையாக ஆண்ட்ரியா இணைந்துள்ளார்.

இந்தப்படத்தில் டாக்ஸி ட்ரைவர் என்றாலும் உண்மையில் ட்ரக் மாபியாவை வேட்டையாடும் அண்டர்கிரவுண்ட் ஆபிசர் மோகன்லால் என்கிறார்கள். உடோபியாயிலே ராஜாவு படம் மம்முட்டி - இயக்குனர் கமல் கூட்டணியில் புதிய பாணியிலான கதையாக உருவாகியிருக்கும் படத்தில் மம்முட்டிக்கு ஜோடியாக புதுமுகம் ஜுவல்மேரி நடிக்கிறார்.

டபுள் பேரல்  படத்தில் பிருத்விராஜ், ஆர்யா, இந்திரஜித், ஆசிப் அலி, சன்னி வெய்ன் என மிகப்பெரிய நட்சத்திர கூட்டணியில் உருவாகியுள்ள இந்தப்படத்தை பிருத்விராஜ், ஆர்யா இருவரும் இணைந்தே தயாரித்துள்ளார்கள். சுப்ரமணியபுரம் ஸ்வாதி கதாநாயகியாக நடித்துள்ளார்.

ஜமுனா பியாரி படத்தில் குஞ்சாக்கோ போபன் கதாநாயகனாக நடிக்க, மிஸ் கேரளாவான காயத்ரி சுரேஷ் கதாநாயகியாக நடிக்கிறார். இப்படத்தில் ஆட்டோ டிரைவராக 
நடிக்கும் குஞ்சாக்கோ, முதன்முறையாக திருச்சூர் பாஷை பேசி இருக்கிறாராம்.

குஞ்சி ராமாயணம் படத்தில் மலையாளத்தில் நட்சத்திர சகோதரர்களான வினீத் சீனிவாசனும் அவரது தம்பி தயன் சீனிவாசனும் இணைந்து நடித்துள்ள படம் இது. கதாநாயகியாக நமீதா பிரமோத் நடிக்க, காமெடி கேரக்டரில் அஜு வர்கீஸ் நடித்துள்ளார்.

கிராமத்து படமாக உருவாகியுள்ள இந்தப்படத்தின் கதை 30 வருடங்களுக்கு முன்னர் நடைபெறுவதுபோல படமாக்கப்பட்டுள்ளதாம்


Post your comment





Related News
ரஜினியுடன் நடிப்பது மகிழ்ச்சி - மாளவிகா மோகனன்
ஜெயலலிதாக வாழ்க்கைப் படத்தில் சசிகலாவாக நடிக்க இரு நடிகைகளுடன் பேச்சுவார்த்தை
கேரள கன்னியாஸ்திரி விவகாரம் - பத்திரிகையாளரிடம் மன்னிப்பு கேட்ட நடிகர் மோகன் லால்
முக்கியமான நாளில் அடுத்த பட அறிவிப்பை வெளியிட்ட மோகன் ராஜா
ஜெயலலிதா வாழ்க்கைப் படத்தில் கமல்ஹாசன், மோகன்லால்
ஆகஸ்ட் 31 முதல் விக்ரம் பிரபுவின் 60 வயது மாநிறம்
சினிமாவில் எந்த விதமான குணச்சித்திர பாத்திரங்களில் நடிப்பதற்கு தயாராக இருக்கிறேன்..! - லதா ராவ்
ஜோதிகாவின் “காற்றின் மொழி“ படத்தில் இடம்பெறும் உலக புகழ் பெற்ற ”ஜிமிக்கி கம்மல்“ பாடல்..!
மாரி 2 படத்தில் இணைந்த பிரபலம், எகிறும் எதிர்பார்ப்பு.!
மீண்டும் இணையும் இயக்குனர் சுசீந்திரன், யுவன் வெற்றிக்கூட்டணி..!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions