மோகன்லால் படத்திற்காக உதவி இயக்குனராக மாறும் நடிகை..!

Bookmark and Share

மோகன்லால் படத்திற்காக உதவி இயக்குனராக மாறும் நடிகை..!

நடிகைகளை பொறுத்தவரை தங்களை அறிமுகப்படுத்திய இயக்குனர்களின் படங்களில் நடிக்கும்போதோ, அல்லது தனக்கு பெயர் வாங்கித்தரும் இயக்குனர்களின் படங்களில் நடிக்கும்போதோ ஒரு உற்சாகம் வந்துவிடும்.

ஸ்பாட்டில் தனக்கு நடிக்கும் வேலையில்லாத நேரங்கள் போக மீதி நேரங்களில் அந்த இயக்குனர்களுக்கு, உதவி இயக்குனர்கள் போல மாறி, சில உதவிகளை செய்வதோடு, சினிமாவையும் கற்றுக்கொள்கின்றனர்.

தமிழ்சினிமாவில் நம்ம வரலட்சுமி கூட தாரை தப்பட்டை படத்தில் பாலாவுக்கு உதவி இயக்குனராகவும் வேலை பார்த்து வருகிறார்.  
அதேபோல மலையாள சினிமாக்களில் மிக முக்கியமான கதாபாத்திரங்களில், குறிப்பாக ரொமான்ஸ் காட்சிகளில் வெளுத்துக்கட்டுபவர் நடிகை மைதிலி.

தற்போது ரஞ்சித் இயக்கத்தில் மோகன்லால் நடிக்கும் லோஹம் படத்தில் இரண்டு கதாநாயகிகளில் ஒருவராக நடித்து வருகிறார். இன்னொரு கதாநாயகியாக ஆண்ட்ரியா நடிக்கிறார். மைதிலியை பாலேரி மாணிக்கம் படத்தின் மூலமாக அறிமுகப்படுத்தியவர் ரஞ்சித் தான்.

அதனால் அவரது படத்தில் மீண்டும் நடிக்கும் மைதிலி, இந்தப்படத்தில் நடிப்பதோடு மட்டுமல்லாது ரஞ்சித்துக்கு உதவி இயக்குனராகவும் மாறி உதவி செய்ய இருக்கிறாராம்.


Post your comment





Related News
ரஜினியுடன் நடிப்பது மகிழ்ச்சி - மாளவிகா மோகனன்
ஜெயலலிதாக வாழ்க்கைப் படத்தில் சசிகலாவாக நடிக்க இரு நடிகைகளுடன் பேச்சுவார்த்தை
கேரள கன்னியாஸ்திரி விவகாரம் - பத்திரிகையாளரிடம் மன்னிப்பு கேட்ட நடிகர் மோகன் லால்
முக்கியமான நாளில் அடுத்த பட அறிவிப்பை வெளியிட்ட மோகன் ராஜா
ஜெயலலிதா வாழ்க்கைப் படத்தில் கமல்ஹாசன், மோகன்லால்
ஆகஸ்ட் 31 முதல் விக்ரம் பிரபுவின் 60 வயது மாநிறம்
சினிமாவில் எந்த விதமான குணச்சித்திர பாத்திரங்களில் நடிப்பதற்கு தயாராக இருக்கிறேன்..! - லதா ராவ்
ஜோதிகாவின் “காற்றின் மொழி“ படத்தில் இடம்பெறும் உலக புகழ் பெற்ற ”ஜிமிக்கி கம்மல்“ பாடல்..!
மாரி 2 படத்தில் இணைந்த பிரபலம், எகிறும் எதிர்பார்ப்பு.!
மீண்டும் இணையும் இயக்குனர் சுசீந்திரன், யுவன் வெற்றிக்கூட்டணி..!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions