முதல்வரை கிண்டல் செய்யும் படத்தில் நடிக்க மறுத்த மோகன்லால்..!

Bookmark and Share

முதல்வரை கிண்டல் செய்யும் படத்தில் நடிக்க மறுத்த மோகன்லால்..!

இந்த செய்தி உண்மையாக இருந்தால், கேட்பதற்கு வருத்தமாகத்தான் இருக்கிறது.. காரணம் மலையாள திரையுலகில் நாற்பது வருட வெற்றி வரலாறு கொண்ட, இயக்குனர் ஐ.வி.சசி இயக்கும் படத்தில் திந்த குளறுபடி.

கமலை வைத்து 'குரு', ரஜினியை வைத்து 'காளி', 'எல்லாம் உன் கைராசி' ஆகிய படங்களை தமிழிலும் இயக்கியுள்ளார் ஐ.வி.சசி. ஆனால் மலையாளத்திலோ இவரது பேவரைட் மம்முட்டிதான்..

அதேசமயம் மோகன்லாலை வைத்தும் சில படங்களை இயக்கியுள்ளார். அதாவது மம்முட்டியை வைத்து ஐந்து படங்களை இயக்கினால் மோகன்லாலை வைத்து ஒன்றை இயக்குவார். ஆனாலும் மோகன்லாலுக்கு 'இனியெங்கிலும்', 'அனுராகி', 'தேவாசுரம்' என ஹிட்டுக்களையும் கொடுக்க தவறவில்லை.

கடைசியாக மோகன்லாலை வைத்து 'ஷ்ரதா' என்ற படத்தை இயக்கினார் ஐ.வி.சசி. இப்போது வனவாசம் முடிந்தது போல் பதினான்கு வருடங்கள் கழித்து மீண்டும் மோகன்லாலை வைத்து ஒரு படம் இயக்கவுள்ளார் என ஜனவரியிலேயே ஒரு தகவல் வெளியானபோது பலரும் சந்தோஷப்பட்டார்கள்.

 காரணம் தனது 66 வயதில் கிட்டத்தட்ட 130 படங்களை இயக்கியுள்ள ஐ.வி.சசி., கடந்த ஐந்து வருடங்களாக படம் எதுவும் இயக்காமல் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் இப்போது மோகன்லால் இவர் இயக்கத்தில் நடிக்கவில்லை என்று சொல்லிவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

காரணம் இந்தப்படத்தில் கேரள முதல்வர் உம்மன் சாண்டியை கிண்டல் செய்யும் விதமாக கதை பின்னப்பட்டுள்ளதாம். அதனாலேயே மோகன்லால் மறுத்துவிட்டதாக சொல்லப்படுகிறது.

தவிர இந்தப்படத்தின் கதையை, இரண்டு ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் இணைந்து உருவாக்கியுள்ளார்களாம். பின்னே அரசியல் நெடிக்கு கேட்கவா வேண்டும்.

 


Post your comment





Related News
ரஜினியுடன் நடிப்பது மகிழ்ச்சி - மாளவிகா மோகனன்
ஜெயலலிதாக வாழ்க்கைப் படத்தில் சசிகலாவாக நடிக்க இரு நடிகைகளுடன் பேச்சுவார்த்தை
கேரள கன்னியாஸ்திரி விவகாரம் - பத்திரிகையாளரிடம் மன்னிப்பு கேட்ட நடிகர் மோகன் லால்
முக்கியமான நாளில் அடுத்த பட அறிவிப்பை வெளியிட்ட மோகன் ராஜா
ஜெயலலிதா வாழ்க்கைப் படத்தில் கமல்ஹாசன், மோகன்லால்
ஆகஸ்ட் 31 முதல் விக்ரம் பிரபுவின் 60 வயது மாநிறம்
சினிமாவில் எந்த விதமான குணச்சித்திர பாத்திரங்களில் நடிப்பதற்கு தயாராக இருக்கிறேன்..! - லதா ராவ்
ஜோதிகாவின் “காற்றின் மொழி“ படத்தில் இடம்பெறும் உலக புகழ் பெற்ற ”ஜிமிக்கி கம்மல்“ பாடல்..!
மாரி 2 படத்தில் இணைந்த பிரபலம், எகிறும் எதிர்பார்ப்பு.!
மீண்டும் இணையும் இயக்குனர் சுசீந்திரன், யுவன் வெற்றிக்கூட்டணி..!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions