லால் vs லால் ; பத்து வருட பனிப்போர் முடிவுக்கு வருமா...?

Bookmark and Share

லால் vs லால் ; பத்து வருட பனிப்போர் முடிவுக்கு வருமா...?

நம்ம ஊரில் ரஜினியை வைத்து ஐந்து படங்களை இயக்கிய பி.வாசு, கமலை வைத்து ஒரு படம் கூட இயக்கவில்லையே அந்தமாதிரி  மலையாள சூப்பர்ஸ்டார் மோகன்லால்.. பிரபல இயக்குனர் லால் ஜோஸ்..

இந்த இருவர் கூட்டணி இன்னும் ஒரு படத்தில் கூட இணையாதது தான் மலையாள திரையுலகில் மிகப்பெரிய ஆச்சர்யமாக கருதப்படுகிறது.. சில வருடங்களுக்கு முன்பே மோகன்லாலையும் பிருத்விராஜையும் வைத்து ஒரு படம் இயக்குவதற்கான வேலைகளை ஆரம்பித்த லால் ஜோஸ், படத்திற்கு 'கஸின்ஸ்' என பெயர் வைத்து போட்டோ ஷூட்டெல்லாம் நடத்தினார்.

ஆனால் வெளியே தெரியாத சில காரணங்களால் அந்தப்படம் கைவிடப்பட்டது. அதற்கடுத்து மோகன்லாலும், லால்ஜோஸின் படத்தில் நடிக்க ஆர்வம் காட்டவில்லை.. அதற்கடுத்து மீண்டும் ஒரு கதையை மோகன்லாலிடம் சொல்ல, க்ளைமாக்ஸ் சரியில்லை, படம் தயாரிக்கும் கம்பெனி சரியில்லை என சில காரணங்களை சொல்லி அதையும் தட்டிக்கழித்துவிட்டார் மோகன்லால்.. மோகன்லால் இப்படி லால்ஜோசை ஒதுக்குவதற்கு என்னதான் காரணம்..? லால் ஜோஸின் ஸ்கிரிப்ட்டுகளில் புதிதாக எதுவும் இல்லை என்கிறாராம் மோகன்லால்..

ஆனால் ஓரளவுக்கு தொடர்ந்து ஹிட்டுகளை கொடுத்துக்கொண்டுதான் வருகிறார் லால் ஜோஸ்.. தவிர மம்முட்டி, பிருத்விராஜ், திலீப் என அனைவரும் அவர் அழைத்தால் தட்டாமல் ஒகே சொல்கின்றனர். ஆனால் மோகன்லாலின் பாராமுகம் தான் லால் ஜோசை ரொம்பவே காயப்படுத்திவிட்டதாம்.. லால் ஜோஸின் காயம்பட்ட இதயத்துக்கு களிம்பு பூசுவாரா மோகன்லால்..?


Post your comment





Related News
ரஜினியுடன் நடிப்பது மகிழ்ச்சி - மாளவிகா மோகனன்
கேரள கன்னியாஸ்திரி விவகாரம் - பத்திரிகையாளரிடம் மன்னிப்பு கேட்ட நடிகர் மோகன் லால்
முக்கியமான நாளில் அடுத்த பட அறிவிப்பை வெளியிட்ட மோகன் ராஜா
ஜெயலலிதா வாழ்க்கைப் படத்தில் கமல்ஹாசன், மோகன்லால்
ஆகஸ்ட் 31 முதல் விக்ரம் பிரபுவின் 60 வயது மாநிறம்
ஜோதிகாவின் “காற்றின் மொழி“ படத்தில் இடம்பெறும் உலக புகழ் பெற்ற ”ஜிமிக்கி கம்மல்“ பாடல்..!
மாரி 2 படத்தில் இணைந்த பிரபலம், எகிறும் எதிர்பார்ப்பு.!
ஒரே ஷெட்யுலில் ” காற்றின் மொழி “ ஷூட்டிங்கை முடித்தார் ஜோதிகா !
பாரிஸ் பாரிஸ் படப்பிடிப்பு முடிவடைந்தது - அக்டோபர் வெளியிடு
பாகுபலி பாணியில் உருவாகியுள்ள மோகன்லால், நிவின் பாலியின் காயம்குளம் கொச்சூன்னி.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions