எடிட்டர் மோகனின் பெரிய மனசு! - டைரக்டர் பி.வாசு

Bookmark and Share

எடிட்டர் மோகனின் பெரிய மனசு! - டைரக்டர் பி.வாசு

ஜெயம்ரவி-டைரக்டர் ஜெயம் ராஜா ஆகியோரின் தந்தை எடிட்டர் மோகன். இவர் தனது மகன்களின் வெற்றிக்கான ஆலோசனைகளை வழங்குவது மட்டுமின்றி, மற்ற நடிகர்களின் படங்களும் ஓட வேண்டும் என்று நினைப்பவர்.

அதனால், எந்த படங்கள் வெளியானாலும் அந்த படங்களை பார்க்கும் அவர், அவை நல்ல படங்களாக இருக்கும் பட்சத்தில் சம்பந்தப்பட்டவர்களை தொடர்பு கொண்டு, படம் நல்லா வந்திருக்கு. பப்ளிசிட்டி பண்ணி படத்தை ஓடவையுங்கள் என்று கேட்டுக்கொள்வாராம்.

அந்த வகையில், பாண்டியராஜனின் மகன் ப்ருத்வி நடித்த நாளை பொழுது உன்னோடு என்ற படம் வெளியானபோது, பாண்டியராஜனைத் தொடர்பு கொண்டு இந்த படத்திற்கு சரியானபடி விளம்பரம் செய்தால் வெற்றி பெற்றுவிடும் என்று ஆதங்கப்பட்டாராம் எடிட்டர் மோகன்.

அதேபோல், டைரக்டர் பி.வாசுவின் மகன் ஷக்தி நடித்த படங்கள் ஓடாமல் அவர் பின்தங்கியிருப்பதால், அவ்வப்போது பி.வாசுவை தொடர்பு கொண்டு ஏதாவது நல்ல கதையில் நடிக்க வைத்து ஷக்தியை வெற்றி நடிகராக்குங்கள் என்று கேட்டுக்கொள்வாராம்.

இந்த விசயத்தை சாலையோரம் படத்தின் ஆடியோ விழாவில் கலந்து கொண்ட டைரக்டர்கள் பாண்டியராஜன், பி.வாசு இருவருமே குறிப்பிட்டனர். அதோடு, தனது மகனும் இந்த சினிமாவில் நடித்துக்கொண்டிருக்கும்போது, மற்ற ஹீரோக்களை போட்டியாக கருதாமல், அவர்களும் வெற்றி பெற வேண்டும் என்று நினைக்கிற பெரிய மனசு எடிட்டர் மோகனை தவிர யாருக்கும் வராது என்றும் பி.வாசு அவரை உயர்வாக பேசினார்.

 


Post your comment





Related News
ஈகோ பிடித்த நடிகர்கள் அஜித்தின் காலை கழுவி தொட்டு வணங்க வேண்டும் - நடிகை மீனா வாசு
மாரி 2 படத்தில் இணைந்த பிரபலம், எகிறும் எதிர்பார்ப்பு.!
ரஜினியின் சந்திரமுகி படத்தின் உண்மை கசிந்தது! இத்தனைநாள் கழித்து வெளியான ரகசியம்
ரஜினி, ஜக்கி வாசுதேவை கிழித்து தொங்கவிடும் பிரகாஷ்ராஜ், என்ன இப்படி சொல்றாரு!
எப்படி இருந்த தல பட நாயகி இப்படி ஆகிட்டாரா? - அதிர்ச்சியூட்டும் புகைப்படம்.!
ஆசிரியர்களை கவுரவப்படுத்தும் `பள்ளிப் பருவத்திலே' - வாசுதேவ் பாஸ்கர்
தனுஷ் படம் அவ்வளவு தானா? ரசிகர்கள் வருத்தம்
துருவ நட்சத்திரம் இப்படி ஆகிவிட்டதே?
அஜித், விஜய்யை தொடர்ந்து அதே இடத்திற்கு கிளம்பிய விக்ரம்
மீண்டும் இணைகிறது என்னை அறிந்தால் கூட்டணி!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions