மோகன் ராஜாவின் தனி ஒருவன் 5 மொழிகளில் ரீமேக் ஆகிறது!

Bookmark and Share

மோகன் ராஜாவின் தனி ஒருவன் 5 மொழிகளில் ரீமேக் ஆகிறது!

மோகன் ராஜா இயக்கத்தில் ஜெயம் ரவி , அரவிந்த் சாமி, நயன்தாரா நடிப்பில் வெளியாகி ஹிட்டான படம் தனி ஒருவன். படத்திற்கு நல்ல வசூல் அதை விட நல்ல விமர்சனங்கள் கிடைத்துள்ளன. 

இந்நிலையில் படத்தை சமீபத்தில் பார்த்த பாலிவுட் டாப் ஸ்டார் சல்மான் கான், மற்றும் ராம் சரண் படம் குறித்து நல்ல கருத்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துள்ளனர். 

ராம் சரணுக்கும் படம் பிடித்துப் போக தற்போது தெலுங்கில் ரீமேக் வேலைகள் விரைவில் நடைபெற உள்ளன. சல்மான் கானும் கொஞ்சம் காத்திருப்பில் வைத்திருப்பதால் சல்மான் கான் நடிக்க மோகன் ராஜா பாலிவுட்டிலும் தனி ஒருவன் படத்தை ரீமேக் செய்வார் என்றே தோன்றுகிறது. 

இப்படம் குறித்த ஒரு சந்திப்பின் போது மோகன் ராஜா பேசுகையில் தெலுங்கு, இந்தி தவிர்த்து கன்னடம், மராத்தி, மற்றும் பெங்காலி மொழிகளிலும் இந்தப்படத்தை எடுக்கப் பேச்சு வார்த்தை நடந்துவருவதாகவும், கன்னடத்தில் புனித் ராஜ் குமார் ஆர்வம் காட்டியுள்ளார் எனவும் , மராத்தியில் நடிக்க ஜெனிலியாவும் அவரது கணவர் ரித்தேஷ் தேஷ்முக்கும் நடிக்க விருப்பம் தெரிவித்துள்ளதாகவும் பகிர்ந்துள்ளார். 

இது நடந்தால் நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஒரு தமிழ் படம் 5 மொழிகளில் ரீமேக் ஆகிறது எனலாம். பொறுத்திருந்து பார்ப்போம்.


Post your comment





Related News
எச்.ராஜாவின் பேச்சைக் கேட்டு வாயை மூடி நிற்கிறது போலீஸ் - நடிகர் சித்தார்த்
கேரள கன்னியாஸ்திரி விவகாரம் - பத்திரிகையாளரிடம் மன்னிப்பு கேட்ட நடிகர் மோகன் லால்
மிகப்பெரிய பொறுப்பு வந்து சேர்ந்திருக்கிறது - ஆரவ்
வசூல் சாதனையில் சீமராஜா! - வேற லெவல் வரவேற்பு
சீமராஜா படத்தில் எங்கள் முந்தைய படங்களில் இருந்து சற்று மேம்பட முயற்சித்திருக்கிறோம் - இயக்குனர் பொன்ராம்!
ரசிகர்களுக்கு இரட்டை விருந்து கொடுக்கும் சிவகார்த்திகேயன்
என் வேலையை எளிதாக்கியது அவர்கள்தான் - பாடலாசிரியர் யுகபாரதி
கமல் அழகாக இருந்ததால் தான் சப்பாணியாக நடிக்க வைத்தேன் - பாரதிராஜா
சீமராஜா படத்தில் கட்டுப்பாடுகளை உடைத்து சுதந்திரம் கொடுத்தார் ஆர்.டி.ராஜா - முத்துராஜ் மகிழ்ச்சி
சிவகார்த்திகேயனின் சீமராஜா வெளியீட்டு உரிமையை கைப்பற்றிய பிரபல நிறுவனம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions