மோகன் ராஜா இயக்கத்தில் நடிக்க விருப்பம்- மகேஷ் பாபு?

Bookmark and Share

மோகன் ராஜா இயக்கத்தில் நடிக்க விருப்பம்- மகேஷ் பாபு?

இதுவரை ரீமேக் படங்களை இயக்கி வந்த மோகன் ராஜா ‘தனி ஒருவன்’ படத்தின் மூலம் நேரடி தமிழ் படத்தை இயக்கி வெற்றிபெற்றுள்ளார். இப்படம் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே ஏகோபித்த வரவேற்பை பெற்று இன்றுவரை திரையரங்குகளில் ஓடி வசூலை குவித்துக்கொண்டுவந்துள்ளது.

இதில் ஜெயம் ரவி,நயன்தாரா மற்றும் பலர் நடித்திருந்தார்கள். வில்லன் வேடத்தில் அரவிந்த் சாமி நடித்திருந்தார். இதில் அரவிந்த் சாமியின் நடிப்பு அனைவராலும் பாராட்டப்பட்டு வருகிறது. இந்த படத்தை தெலுங்கு, இந்தியில் ரீமேக் செய்ய பல முன்னணி நடிகர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

சமீபத்தில் சல்மான் கான், மகேஷ்பாபு போன்றவர்கள் ‘தனி ஒருவன்’ படத்தை பற்றி புகழ்ந்ததாகவும் இதன் ரீமேக்கில் நடிக்க விரும்புவதாகவும் கூறப்படுகிறது.

மேலும், ஏற்கனவே மகேஷ்பாபு ஒரு நிகழ்ச்சியில் மோகன் ராஜா இயக்கத்தில் நடிக்க விருப்பம் இருப்பதாக தெரிவித்திருந்தார். அனேகமாக ‘தனி ஒருவன்’ தெலுங்கு ரீமேக்கில் மகேஷ் பாபு நடிப்பார் என்று ஏதிர்ப்பார்க்கப்படுகிறது.


Post your comment





Related News
ஆக்‌‌ஷன் ஹீரோவாகும் சிவகார்த்திகேயன்
பாடல் காப்புரிமை சம்பந்தப்பட்ட வழக்கு - இளையராஜா மீண்டும் எச்சரிக்கை
ரஜினியுடன் நடிப்பது மகிழ்ச்சி - மாளவிகா மோகனன்
எச்.ராஜாவின் பேச்சைக் கேட்டு வாயை மூடி நிற்கிறது போலீஸ் - நடிகர் சித்தார்த்
கேரள கன்னியாஸ்திரி விவகாரம் - பத்திரிகையாளரிடம் மன்னிப்பு கேட்ட நடிகர் மோகன் லால்
மிகப்பெரிய பொறுப்பு வந்து சேர்ந்திருக்கிறது - ஆரவ்
வசூல் சாதனையில் சீமராஜா! - வேற லெவல் வரவேற்பு
சீமராஜா படத்தில் எங்கள் முந்தைய படங்களில் இருந்து சற்று மேம்பட முயற்சித்திருக்கிறோம் - இயக்குனர் பொன்ராம்!
ரசிகர்களுக்கு இரட்டை விருந்து கொடுக்கும் சிவகார்த்திகேயன்
என் வேலையை எளிதாக்கியது அவர்கள்தான் - பாடலாசிரியர் யுகபாரதி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions