வெள்ள நிவாரணப் பணிகளில் மக்களைக் கவர்ந்த நடிகர்கள்!

Bookmark and Share

வெள்ள நிவாரணப் பணிகளில் மக்களைக் கவர்ந்த நடிகர்கள்!

சென்னை மழை வெள்ளம் நமக்கு நிறைய பாடம் கற்றுக் கொடுத்திருக்கிறது. கற்றுக் கொண்டோமா என்றுதான் தெரியவில்லை. நாமெல்லாம் மறந்து போய் விட்ட பலர் நம்மை மறக்காமல் நமக்காக ஓடோடி வந்து உதவிக் கரம் நீட்டிய அரிய செயல்களலெல்லாம் சென்னையில் இந்த மழைக்காலத்தில் நடந்தேறியது.

நடிகர் மோகன் அதில் ஒருவர். நாமெல்லாம் கிட்டத்தட்ட இவரை மறந்து விட்டோம். அவரும் கூட அமைதியாக ஒதுங்கி விட்டோம். ஆனால் வெள்ளத்தில் சிக்கி சென்னை மக்கள் தத்தளித்தபோது ஓடி வந்து உதவி செய்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தி விட்டார் மோகன். இவர் வந்தாலும் வராவிட்டாலும் யாரும் கேட்டிருக்கப் போவதில்லை. இருந்தாலும் அவராகவே வந்து அருமையாக உதவி விட்டுப் போயுள்ளார் மோகன்.

மக்களைக் கவர்ந்த நடிகர்கள் வெள்ள நிவாரணப் பணிகளில் சில நடிகர்களும், சில பிரபலங்களும் உண்மையிலேயே அசத்தி விட்டனர். யாரும் எதிர்பாராத வகையில் குட்டி அரசுகள் போல மாறி அவர்கள் செய்த காரியம் அப்பப்பா ஆயுள் உள்ளவரைக்கும் சென்னை மக்கள் மறக்க மாட்டார்கள்.

வெள்ள நிவாரணப் பணிகளில் முதலில் களத்தில் குதித்தவர்கள் நடிகர் சித்தார்த்தும், ஆர்ஜே பாலாஜியும்தான். அதேபோல மயில்சாமி உள்ளிட்டோரும் நிவாரணப் பணிகளில் சத்தமின்றி அசத்தினர்.

இதில் குறிப்பிடத்தக்க இன்னொரு நடிகர் மோகன். தமிழ் மக்கள் மனதில் தனி இடம் பிடித்தவர். ரஜினி, கமலுக்கு இணையான பிரபலத்துடன் ஒரு காலத்தில் தமிழ் சினிமாவில் வலம் வந்தவர்.

காலமும், வயதும் ஓடிப் போனதால் மோகன் மார்க்கெட்டும் மங்கிப் போனது. உருவம் படத்தில் வித்தியாசமாக நடித்திருந்தார். ஆனால் படம் ஓடவில்லை. சுட்ட பழம் படத்தோடு தமிழ் அவருக்கு குட்பை சொல்லி விட்டது. அவ்வப்போது ஏதாவது நிகழ்ச்சிகளில் பார்க்க முடிகிறது.

சமீபத்தில் கூட நடிகர் சங்கத் தேர்தலில் ஓட்டுப் போட வந்தார். ஆனால் அவரது ஓட்டை யாரோ போட்டு விட்டதாக ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றார். இந்த நிலையில் சென்னை மக்களுக்கு கை கொடுக்க ஓடி வந்தார் மோகன்.

சென்னையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளிக்கு விசிட் அடித்த மோகன் அங்கு தன்னால் ஆன உ்தவிகளைச் செய்தது மக்களை நெகிழ வைத்தது. ஏங்க உதவி செய்யலை என்று யாரும் கேட்க முடியாது.. ஆனாலும் அவராகவே வந்து நம் கண்களைத் துடைத்துச் சென்ற அந்த செயல் நிச்சயம் பாராட்டுக்குரியது. 


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions