மோகன்பாபு மகன் திருமண நிகழ்ச்சியில் ரஜினிகாந்த் நடனமாடுகிறார்

Bookmark and Share

மோகன்பாபு மகன் திருமண நிகழ்ச்சியில் ரஜினிகாந்த் நடனமாடுகிறார்

தெலுங்கு முன்னணி நடிகரும் அரசியல் பிரமுகருமான மோகன்பாபு மகன் மனோஜ் மஞ்சுவுக்கு திருமணம் நிச்சயமாகியுள்ளது. இந்த திருமணத்தை ஐந்து நாட்கள் விழாவாக கொண்டாகின்றனர். வருகிற 14–ந்தேதி இவ்விழா துவங்குகிறது.

ஒவ்வொரு நாளும் ஆட்டம், பாட்டம் கொண்டாட்டம் என கலை நிகழ்ச்சிகள் நடத்த உள்ளனர். தெலுங்கு நடிகர், நடிகைகள் பலர் இதில் பங்கேற்று ஆட உள்ளார்கள். இந்த திருமணத்தில் ரஜினி தனது மனைவி லதா, மகள்கள் ஐஸ்வர்யா, சவுந்தர்யா ஆகயோருடன் கலந்து கொள்கிறார்.

ரஜினியும், மோகன்பாபுவும் நெருங்கிய நண்பர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த திருமணத்தில் ஒரு பாடலுக்கு ரஜினிகாந்த் மேடையில் நடனம் ஆட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

மெகந்தி சடங்கில் அவர் ஆடப் போகிறாராம். ரஜினி திருமண நிகழ்ச்சிகளில் ஆடியது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. முதல் தடவையாக மோகன்பாபு இல்ல திருமணத்தில் ஆடுகிறார். 

 


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions