அப்பாவுடன் நடிக்கமுடியாத ஆசையை மகனுடன் நடித்து நிறைவேற்றிக்கொண்ட மோகன்லால்!

Bookmark and Share

அப்பாவுடன் நடிக்கமுடியாத ஆசையை மகனுடன் நடித்து நிறைவேற்றிக்கொண்ட மோகன்லால்!

கதையில் முக்கியத்துவமுள்ள கேரக்டர் என்றால் எந்த நடிகருடனும், எந்த மொழியிலும் நடிக்கத் தயாராக இருப்பவர் மலையாள சூப்பர்ஸ்டார் மோகன்லால் ஜில்லா படத்தில் விஜய்யுடன் கைகோர்த்து நடித்ததும் அந்தவகையில் தான். இதேபோல தற்போது புனித் ராஜ்குமார் ஹீரோவாக நடித்துள்ள மைத்ரி என்ற கன்னட படத்திலும் ஒரு முக்கியமான கேரக்டரில் நடித்துள்ளார் மோகன்லால். 

இந்தப்படத்தில் அவருக்கு விஞ்ஞானி கதாபாத்திரம்.  கிரிராஜ் என்பவர் இயக்கியுள்ள இந்தப்படத்தில் கதாநாயகியாக பாவனா நடிக்க, முக்கிய வேடத்தில் அது குல்கர்னி நடித்திருக்கிறார். படத்திற்கு இசையமைத்துள்ளவர் நம்ம இசைஞானி இளையராஜா. இந்தப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா சமீபத்தில் பெங்களூருவில் நடைபெற்றது. இதில் இளையராஜா கலந்துகொண்டு கன்னட மொழியில் வாழ்த்தி பேசினார்.. விழாவில் மோகன்லால் கலந்துகொள்ளவில்லை என்றாலும் அவரது வாழ்த்துச்செய்தி வீடியோவாக ஒளிபரப்பப்பட்டது. 

அதில் “நான் மிகுந்த மரியாதை வைத்திருக்கும் மனிதர்களில் கன்னட சூப்பர்ஸ்டார் ராஜ்குமார் சாரும் ஒருவர். அவருடன் நடிக்கமுடியாமல் போனதில் எனக்கு நிறைய வருத்தம் இருந்தது.. ஆனால் அந்த ஆசையை நிறைவேற்றும் விதமாகத்தான் இந்தப்படத்தில் அவரது மகன் புனித்துடன் இணைந்து நடித்திருக்கிறேன்.. ராஜ்குமார் சாருடன் நடித்த உணர்வே எனக்கு ஏற்பட்டது. இது வித்தியாசமான, சமூக பொறுப்புள்ள ஒரு படம்” என குறிப்பிட்டு வாழ்த்தி பேசினார். 


Post your comment





Related News
கேரள கன்னியாஸ்திரி விவகாரம் - பத்திரிகையாளரிடம் மன்னிப்பு கேட்ட நடிகர் மோகன் லால்
பாகுபலி பாணியில் உருவாகியுள்ள மோகன்லால், நிவின் பாலியின் காயம்குளம் கொச்சூன்னி.!
நிவின் பாலி படத்துக்கு வசனம் எழுதும் மதன் கார்கி..!
பிக்பாஸ் தினமும் மொத்தம் இத்தனை கோடி பேர் பார்க்கிறார்களா? - கமல் கூறிய அதிகாரப்பூர்வ தகவல்
மோகன்லாலின் 1000 கோடி படத்திற்கு புதிய சிக்கல்
தமிழில் 3டி தொழில்நுட்பத்தில் வெளியாகும் மோகன்லாலின் ‘புலிமுருகன்’
மங்காத்தா போல் படம் எடுக்கவா இல்லை உலக அளவில் ஒரு படம் வேண்டுமா- பிரேமம் இயக்குனரின் கேள்வி
சத்யராஜ் இல்லை, முதலில் கட்டப்பாவாக நடிக்கவிருந்தது இந்த நடிகர் தான்
மோகன்லால் படமே இன்னும் தொடங்கவில்லை- அதற்குள் எழுந்த பிரச்சனை
ரூ.1000 கோடி பட்ஜெட்டில் 5 மொழிகளில் உருவாகும் மகாபாரத கதை: அதிகாரப்பூர்வ அறிவிப்பு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions