மோகன்லால், ரவிச்சந்திரன், வெங்கடேஷ் அடுத்து கமல்ஹாசன்...!

Bookmark and Share

மோகன்லால், ரவிச்சந்திரன், வெங்கடேஷ் அடுத்து கமல்ஹாசன்...!

ஒரே ஒரு படம், நான்கு மொழிகளில் நான்கு ஹீரோக்கள். இப்படி எப்போதோ ஒரு முறைதான் இம்மாதிரியான அதிசயம் தென்னிந்தியத் திரையுலகில் நடக்கும். 2013ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் மலையாளத்தில் மோகன்லால் நாயகனாக நடித்து வெளிவந்த த்ரிஷ்யம் படம் பல முந்தைய வரலாறுகளை முறியடித்து 50 கோடி ரூபாய்க்கும் மேல் வசூல் செய்தது.

வசூல் ரீதியாக மட்டுமல்லாமல், சிறந்த படமாகவும் விமர்சகர்களால் பாராட்டப்பட்டது. ஒரு நடுத்தரக் குடும்பத்தினருக்கு எழும் ஒரு பிரச்சனையை அந்தக் குடும்பத்தின் தலைவன் எப்படி சமாளிக்கிறான் என்ற கதை தென்னிந்தியாவிற்குப் பொதுவான ஒன்று. அதனால்தான் இந்தப் படம் அதன் பின் அனைத்து தென்னிந்திய மொழிகளிலும் ரீமேக் செய்யப்பட்டது.

கடைசியாக தமிழில் ரீமேக்காகி நாளை வெளியாக உள்ளது. மலையாளத்தில் மோகன்லால், கன்னடத்தில் ரவிச்சந்திரன், தெலுங்கில் வெங்கடேஷ், தமிழில் கமல்ஹாசன் என அந்தந்த மொழிகளில் முக்கியமான சீனியர் நடிகர்கள் நடித்துள்ளனர்.

இவர்களில் ஒருவருக்கு ஒருவர் சளைத்தவரில்லை என்பது உண்மை. ஆனாலும், எப்போதுமே ஒரிஜனல் ஒரிஜனல்தான் என்று சொல்வார்கள்.

அந்த வகையில் மோகன்லாலின் யதார்த்தமான நடிப்பை மற்ற நடிகர்கள் மிஞ்ச வாய்ப்பேயில்லை என்றுதான் ஒரிஜனல் மலையாள 'த்ரிஷ்யம்' படத்தைப் பார்த்தவர்கள் சொல்வார்கள்.

ஆனால், கமல்ஹாசன் தமிழில் நடிக்கிறார் என்ற போது அதற்கென தனி எதிர்பார்ப்பும் வந்தது. இருந்தாலும் கமல்ஹாசன் வைத்துள்ள ஒட்டு மீசை, வட தமிழ்நாட்டு மக்களுக்கு அதிகம் புரியாத நெல்லைத் தமிழ் ஆகியவை தமிழ்ப் படத்தில் வித்தியாசமாகவே பார்க்கப்படும்.

கமல்ஹாசனே தமிழில் நடித்தாலும் ஒரிஜனலைக் கெடுக்காமல் இருக்க வேண்டுமே என்றுதான் இப்போதைக்கு 'த்ரிஷ்யம்' மலையாளப் படத்தைப் பார்த்து ரசித்த ரசிகர்கள் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.


Post your comment





Related News
கேரள கன்னியாஸ்திரி விவகாரம் - பத்திரிகையாளரிடம் மன்னிப்பு கேட்ட நடிகர் மோகன் லால்
பாகுபலி பாணியில் உருவாகியுள்ள மோகன்லால், நிவின் பாலியின் காயம்குளம் கொச்சூன்னி.!
நிவின் பாலி படத்துக்கு வசனம் எழுதும் மதன் கார்கி..!
பிக்பாஸ் தினமும் மொத்தம் இத்தனை கோடி பேர் பார்க்கிறார்களா? - கமல் கூறிய அதிகாரப்பூர்வ தகவல்
மோகன்லாலின் 1000 கோடி படத்திற்கு புதிய சிக்கல்
தமிழில் 3டி தொழில்நுட்பத்தில் வெளியாகும் மோகன்லாலின் ‘புலிமுருகன்’
மங்காத்தா போல் படம் எடுக்கவா இல்லை உலக அளவில் ஒரு படம் வேண்டுமா- பிரேமம் இயக்குனரின் கேள்வி
சத்யராஜ் இல்லை, முதலில் கட்டப்பாவாக நடிக்கவிருந்தது இந்த நடிகர் தான்
மோகன்லால் படமே இன்னும் தொடங்கவில்லை- அதற்குள் எழுந்த பிரச்சனை
ரூ.1000 கோடி பட்ஜெட்டில் 5 மொழிகளில் உருவாகும் மகாபாரத கதை: அதிகாரப்பூர்வ அறிவிப்பு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions