“மோகன்லால் பண்ணிட்டார்.. என்னால் முடியலை” - புனீத் ராஜ்குமார் ஓபன் டாக்..!

Bookmark and Share

“மோகன்லால் பண்ணிட்டார்.. என்னால் முடியலை” - புனீத் ராஜ்குமார் ஓபன் டாக்..!

கன்னடத்தில் சமீபத்தில் புனித் ராஜ்குமார் ஹீரோவாக நடித்து வெளியான 'மைத்ரி' படம் சூப்பர்ஹிட்டாகியுள்ளது. இதன் சிறப்பம்சமே இந்தப்படத்தில் ஒரு முக்கியமான கேரக்டரில் நடித்துள்ளார் மோகன்லால்.

இந்தப்படத்தில் அவருக்கு விஞ்ஞானி கதாபாத்திரம். கதையில் தனக்கு முக்கியத்துவமுள்ள கேரக்டர் என்றால் எந்த நடிகருடனும், எந்த மொழியிலும் நடிக்கத் தயாராக இருப்பவர் மலையாள சூப்பர்ஸ்டார் மோகன்லால்.

'ஜில்லா' படத்தில் விஜய்யுடன் கைகோர்த்து நடித்ததும் அந்தவகையில் தான்.  கிரிராஜ் என்பவர் இயக்கியுள்ள இந்தப்படத்தில் கதாநாயகியாக பாவனா நடிக்க, முக்கிய வேடத்தில் அது குல்கர்னி நடித்திருக்கிறார்.

படத்திற்கு இசையமைத்துள்ளவர் நம்ம இசைஞானி இளையராஜா. இந்தப்படத்திற்காக மோகன்லாலே கன்னடத்தில் டப்பிங்கும் பேசியிருந்தார். இந்தப்படம் இப்போது மலையாளத்திலும் டப்பிங் ஆகிறது. ஆனால் புனீத் மலையாளத்தில் டப்பிங் பேசவில்லை.

இதுபற்றி சமீபத்தில் புனீத் ராஜ்குமார் சொல்லும்போது,

“என்னால் தமிழையும், தெலுங்கையும் சுலபமாக பேச முடிகிறது. ஆனால் மலையாளத்தில் நானே பேசி டப்பிங் பண்ணுவதை என்னால் கனவில் கூட நினைத்து பார்க்க முடியவில்லை. ஆனால் மோகன்லால் கன்னடத்திலும் டப்பிங் பேசி அசத்திவிட்டார்.

அவர் கன்னடத்தில் பேசி எங்கள் மொழிக்கு மரியாதை செய்திருக்கிறார். ஆனால் நான் மலையாளத்தில் பேசாமல் இருப்பதுதான் அந்த மொழிக்கு செய்யும் நியாயமாக இருக்கும்” என கூறியுள்ளார். 


Post your comment





Related News
கேரள கன்னியாஸ்திரி விவகாரம் - பத்திரிகையாளரிடம் மன்னிப்பு கேட்ட நடிகர் மோகன் லால்
பாகுபலி பாணியில் உருவாகியுள்ள மோகன்லால், நிவின் பாலியின் காயம்குளம் கொச்சூன்னி.!
நிவின் பாலி படத்துக்கு வசனம் எழுதும் மதன் கார்கி..!
பிக்பாஸ் தினமும் மொத்தம் இத்தனை கோடி பேர் பார்க்கிறார்களா? - கமல் கூறிய அதிகாரப்பூர்வ தகவல்
மோகன்லாலின் 1000 கோடி படத்திற்கு புதிய சிக்கல்
தமிழில் 3டி தொழில்நுட்பத்தில் வெளியாகும் மோகன்லாலின் ‘புலிமுருகன்’
மங்காத்தா போல் படம் எடுக்கவா இல்லை உலக அளவில் ஒரு படம் வேண்டுமா- பிரேமம் இயக்குனரின் கேள்வி
சத்யராஜ் இல்லை, முதலில் கட்டப்பாவாக நடிக்கவிருந்தது இந்த நடிகர் தான்
மோகன்லால் படமே இன்னும் தொடங்கவில்லை- அதற்குள் எழுந்த பிரச்சனை
ரூ.1000 கோடி பட்ஜெட்டில் 5 மொழிகளில் உருவாகும் மகாபாரத கதை: அதிகாரப்பூர்வ அறிவிப்பு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions