டாக்ஸி ட்ரைவராக மோகன்லாலின் புதிய அவதாரம்..!

Bookmark and Share

டாக்ஸி ட்ரைவராக மோகன்லாலின் புதிய அவதாரம்..!

மலையாளத்தில் மோகன்லால் நடிக்காத கேரக்டர்களே இல்லை என்பது தான் உண்மை நிலவரம். அதனால் தற்போது அவரை வைத்து படம் இயக்கும் இயக்குனர்கள் அவருக்கு வித்தியாசமான கேரக்டரை கொடுக்க வேண்டும் என அதிகம் மெனக்கெடுகிறார்கள்..

இன்னும் ஒரு சிலர் அவர் ஏற்கனவே நடித்த கேரக்டராக இருந்தாலும் கூட, மீண்டும் அதில் ஏதாவது வித்தியாசப்படுத்தி காட்ட முயற்சிக்கிறார்கள். தற்போது மோகன்லாலை வைத்து 'லோஹம்' படத்தை இயக்கிவரும் ரஞ்சித்தும் இதே பாணியை பின்பற்றித்தான் இந்தப்படத்தில் மோகன்லாலை மீண்டும் டாக்ஸி ட்ரைவர் ஆகியுள்ளார்.

ஏற்கனவே 17 வருடங்களுக்கு முன் லோகிததாஸ் இயக்கிய 'கண்மதம்' படத்தில் மும்பையில் டாக்ஸி ட்ரைவராக நடித்திருந்தார் மோகன்லால். அதுமட்டுமா 'பிரம்மராம்' படத்தில் ஜீப் ஓட்டுனராக, 'ஷிகார்' படத்தில் லாரி ட்ரைவராக, 'ஏய் ஆட்டோ' படத்தில் ஓட்டுனராக, அவ்வளவு ஏன்..

'வாமனபுரம் பஸ் ரூட்' என்கிற படத்தில் பஸ் கிளீனராக கூட நடித்திருந்தார் மோகன்லால். தற்போது 'லோஹம்' படத்தில் டாக்ஸி ட்ரைவராக மாறியுள்ள மோகன்லால் தங்க கடத்தல் கும்பலுடன் சந்திக்கும் பிரச்சனைகள் தான் படத்தின் கதைக்களம்.


Post your comment





Related News
கேரள கன்னியாஸ்திரி விவகாரம் - பத்திரிகையாளரிடம் மன்னிப்பு கேட்ட நடிகர் மோகன் லால்
பாகுபலி பாணியில் உருவாகியுள்ள மோகன்லால், நிவின் பாலியின் காயம்குளம் கொச்சூன்னி.!
நிவின் பாலி படத்துக்கு வசனம் எழுதும் மதன் கார்கி..!
பிக்பாஸ் தினமும் மொத்தம் இத்தனை கோடி பேர் பார்க்கிறார்களா? - கமல் கூறிய அதிகாரப்பூர்வ தகவல்
மோகன்லாலின் 1000 கோடி படத்திற்கு புதிய சிக்கல்
தமிழில் 3டி தொழில்நுட்பத்தில் வெளியாகும் மோகன்லாலின் ‘புலிமுருகன்’
மங்காத்தா போல் படம் எடுக்கவா இல்லை உலக அளவில் ஒரு படம் வேண்டுமா- பிரேமம் இயக்குனரின் கேள்வி
சத்யராஜ் இல்லை, முதலில் கட்டப்பாவாக நடிக்கவிருந்தது இந்த நடிகர் தான்
மோகன்லால் படமே இன்னும் தொடங்கவில்லை- அதற்குள் எழுந்த பிரச்சனை
ரூ.1000 கோடி பட்ஜெட்டில் 5 மொழிகளில் உருவாகும் மகாபாரத கதை: அதிகாரப்பூர்வ அறிவிப்பு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions