மோகன்லால் நடித்த நாடகத்திற்கு தாதாசாகிப் பால்கே விருது..!

Bookmark and Share

மோகன்லால் நடித்த நாடகத்திற்கு தாதாசாகிப் பால்கே விருது..!

அந்நிய நாட்டவரை இந்த மண்ணில் காலூன்ற விடமாட்டோம் என எதிர்த்து போராடிய மலையாள தேசத்தின் மாபெரும் போராட்ட வீரர் தான் குஞ்சாலி மரைக்காயர். அந்த மாவீரர் குஞ்சாலி மரைக்காயர் வரலாற்றை படமாக்கவேண்டும் என்கிற ஆர்வம் பல மலையாள இயக்குனர்களுக்கு இன்றும் உண்டு.

ஆனால் நாடக வடிவில் அதற்கு முதலில் பிளையார் சுழி போட்டவர் பிரபல மலையாள இயக்குனரான டி.கே.ராஜீவ் குமார்.  மலையாள சினிமாவில் 35 வருட சரித்திரம் கொண்ட இவர் தான் புகழ்பெற்ற மைடியர் குட்டிச்சாத்தான் படத்தை இயக்கியவர்.. இவர்தான் குஞ்சாலி மரைக்காயர் நாடகத்தை அவ்வப்போது நடத்தி வருகிறார்.

கடந்த ஜனவரியில் கேரளாவில் நடைபெற்ற தேசிய விளையாட்டு போட்டிகளின் துவக்க நாள் விழாவில் கூட 'குஞ்சாலி மரைக்காயர்' நாடகத்தை அரங்கேற்றினார்.

அதில் குஞ்சாலி மரைக்காயராக மோகன்லால் நடித்த அதிசயமும் அப்போது அரங்கேறியது.. ஏற்கனவே மோகன்லாலை வைத்து மூன்று படங்களை இயக்கிய டி.கே.ராஜீவ் குமார், 'குஞ்சாலி மரைக்காயர்' வரலாற்றை படமாக்கப்போவதாகவும் கூட செய்திகள் அடிபட்டன.

இந்த நிலையில் சமீபத்தில் நடைபெற்ற 5வது தாதாசாகிப் பால்கே விருதுக்கான திரைப்பட விழாவில் கலந்துகொண்டு, சிறந்த விஷுவல் எபெக்ட்ஸ்க்கான தாதாசாகிப் பால்கே விருதை பெற்றுள்ளது இந்த நாடகம். 


Post your comment





Related News
கேரள கன்னியாஸ்திரி விவகாரம் - பத்திரிகையாளரிடம் மன்னிப்பு கேட்ட நடிகர் மோகன் லால்
பாகுபலி பாணியில் உருவாகியுள்ள மோகன்லால், நிவின் பாலியின் காயம்குளம் கொச்சூன்னி.!
நிவின் பாலி படத்துக்கு வசனம் எழுதும் மதன் கார்கி..!
பிக்பாஸ் தினமும் மொத்தம் இத்தனை கோடி பேர் பார்க்கிறார்களா? - கமல் கூறிய அதிகாரப்பூர்வ தகவல்
மோகன்லாலின் 1000 கோடி படத்திற்கு புதிய சிக்கல்
தமிழில் 3டி தொழில்நுட்பத்தில் வெளியாகும் மோகன்லாலின் ‘புலிமுருகன்’
மங்காத்தா போல் படம் எடுக்கவா இல்லை உலக அளவில் ஒரு படம் வேண்டுமா- பிரேமம் இயக்குனரின் கேள்வி
சத்யராஜ் இல்லை, முதலில் கட்டப்பாவாக நடிக்கவிருந்தது இந்த நடிகர் தான்
மோகன்லால் படமே இன்னும் தொடங்கவில்லை- அதற்குள் எழுந்த பிரச்சனை
ரூ.1000 கோடி பட்ஜெட்டில் 5 மொழிகளில் உருவாகும் மகாபாரத கதை: அதிகாரப்பூர்வ அறிவிப்பு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions