பல வருடங்களாக விக் பயன்படுத்துவதை ஒப்புக்கொண்ட மோகன்லால்..!

Bookmark and Share

பல வருடங்களாக விக் பயன்படுத்துவதை ஒப்புக்கொண்ட மோகன்லால்..!

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்துக்கு இருக்கும் தைரியம் இந்திய திரையுலகில் மற்ற எந்த நடிகர்களுக்கும் இல்லை என்றே அடித்து சொல்லலாம். 1996 தேர்தல் நேரத்தில் ஏர்போர்ட்டில் வைத்து அவர் அனைவருக்கும் போஸ் கொடுத்தபோது அவரது தலையில் விழுந்திருந்த வழுக்கை பலரை அதிர வைத்து.

ஆனால் அதை எந்த கூச்சமும் இன்றி வெளிப்படுத்தினார் ரஜினி. படங்களில் மட்டும் விக், மற்றபடி வெளியிடங்களில் ஒரிஜினல் கெட்டப்.. இதுதான் ரஜினியின் பாலிஸி.

ஆனால் படங்களில் மட்டும் டீசன்டான தனது ரோலை டேமேஜ் படுத்திக்கொள்ள மாட்டார் ரஜினி. ஆனால் மலையாள சூப்பர்ஸ்டார் மோகன்லாலோ இதற்கு நேர்மாறானவர்.. தான் நடித்த 'தன்மாத்ரா' என்கிற படத்தில் ஞாபக மறதி நோயால் பாதிக்கப்பட்டு ஒரு காட்சியில் ஜட்டியுடன் கூட நடிக்க ஒப்புக்கொண்டவர் தான் அவர். ஆனால் தனது தலையில் உள்ள முடி ஓரளவு குறைய ஆரம்பித்ததும் படங்களில் விக் வைத்துக்கொள்ள துவங்கினார்.

அதையே பொது இடங்களிலும் பயன்படுத்த ஆரம்பித்தார். இன்றுவரையிலும் அப்படித்தான். தனது ஒரிஜினல் ஹேர்ஸ்டைலை வெளிக்காட்ட அவர் விரும்பவில்லை.

ரஜினி பல வருடங்களுக்கு முன்னரே நரைத்துவிட்ட தனது தலைமுடிக்கு டை அடித்து மறைத்ததாக இருபது வருடம் கழித்து சொன்னபோது, இங்கேயுள்ள ஒரு அரசியல் கட்சித்தலைவர் ரஜினி டை அடித்து அவரது ரசிகர்களை ஏமாற்றிவிட்டார் என்றெல்லாம் கூட குற்றம் சாட்டினார்.

அதேபோல மோகன்லால் விக் பயன்படுத்தி நடிக்கிறார் என கேரளாவிலும் ஒரு சிலர் குற்றம் சாட்டுவது உண்டு.. ஆனால் சமீபத்தில் மோகன்லால் அளித்த ஒரு பேட்டியில், “ஆமாம்.. நான் ரொம்ப நாளாக விக் வைத்துள்ளேன்.. என்னுடைய மேக்கப்பை எந்த அளவுக்கு பயன்படுத்துவது என்பது என் உரிமை.. ஆனால் அதை கேள்வி கேட்க யாருக்கும் உரிமை இல்லை” என பதிலடி தரும் விதமாக விளக்கம் அளித்துள்ளார்.


Post your comment





Related News
கேரள கன்னியாஸ்திரி விவகாரம் - பத்திரிகையாளரிடம் மன்னிப்பு கேட்ட நடிகர் மோகன் லால்
பாகுபலி பாணியில் உருவாகியுள்ள மோகன்லால், நிவின் பாலியின் காயம்குளம் கொச்சூன்னி.!
நிவின் பாலி படத்துக்கு வசனம் எழுதும் மதன் கார்கி..!
பிக்பாஸ் தினமும் மொத்தம் இத்தனை கோடி பேர் பார்க்கிறார்களா? - கமல் கூறிய அதிகாரப்பூர்வ தகவல்
மோகன்லாலின் 1000 கோடி படத்திற்கு புதிய சிக்கல்
தமிழில் 3டி தொழில்நுட்பத்தில் வெளியாகும் மோகன்லாலின் ‘புலிமுருகன்’
மங்காத்தா போல் படம் எடுக்கவா இல்லை உலக அளவில் ஒரு படம் வேண்டுமா- பிரேமம் இயக்குனரின் கேள்வி
சத்யராஜ் இல்லை, முதலில் கட்டப்பாவாக நடிக்கவிருந்தது இந்த நடிகர் தான்
மோகன்லால் படமே இன்னும் தொடங்கவில்லை- அதற்குள் எழுந்த பிரச்சனை
ரூ.1000 கோடி பட்ஜெட்டில் 5 மொழிகளில் உருவாகும் மகாபாரத கதை: அதிகாரப்பூர்வ அறிவிப்பு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions