கலைநிகழ்ச்சி பணத்தை மோகன்லால் விருப்பபடி நல உதவிகளுக்கு பயன்படுத்துவோம்: கேரள மந்திரி தகவல்

Bookmark and Share

கலைநிகழ்ச்சி பணத்தை மோகன்லால் விருப்பபடி நல உதவிகளுக்கு பயன்படுத்துவோம்: கேரள மந்திரி தகவல்

திருவனந்தபுரத்தில் தேசிய விளையாட்டு போட்டிகள் நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியின் தொடக்க விழா பிரமாண்டமான முறையில் கடந்த 30–ந் தேதி நடந்தது.
விழாவில் பிரபல மலையாள நடிகர் மோகன்லால் பங்கேற்ற ‘லாலிசம்’ என்ற கலை நிகழ்ச்சி இடம் பெற்றது. இதில் பிரபல பாடகர்களும் பங்கேற்றனர்.

இந்த கலை நிகழ்ச்சி பொதுமக்களை கவரவில்லை என்றும் பாடகர்கள் மேடையில் பாடாமல் பதிவு செய்யப்பட்ட பாடல்களுக்கு வாயை மட்டும் அசைத்ததாகவும் பரபரப்பு குற்றச்சாட்டு எழுந்தது.

இதனால் மோகன்லாலை கண்டித்து இணையதளங்களில் கருத்துகளும் பரவியது. இந்த நிலையில் கலை நிகழ்ச்சி நடத்துவதற்காக தான் பெற்ற ரூ.1 கோடியே 63 லட்சத்தை செக் மூலம் கேரள அரசுக்கு மோகன்லால் அனுப்பி வைத்தார்.

அதே சமயம் அந்த பணத்தை அரசு திரும்ப பெற்று கொள்ளாது என்று கேரள முதல்வர் உம்மன்சாண்டி அறிவித்தார். பணத்தை திரும்ப பெற மாட்டேன் என்று மோகன்லாலும் திட்டவட்டமாக கூறி விட்டார்.

இந்த நிலையில் இந்த பிரச்சினைக்கு முடிவு காண்பதற்காக கேரள முதல்வர் உம்மன்சாண்டியும், விளையாட்டு மந்திரி திருவஞ்சூர் ராதாகிருஷ்ணனும் கொச்சியில் உள்ள நடிகர் மோகன்லால் வீட்டிற்கு நேரில் சென்றனர். அவர்கள் மோகன்லாலிடம் பணத்தை திரும்ப பெற்றுக்கொள்ளும்படி வற்புறுத்தினார்கள்.

ஆனால் சர்ச்சை ஏற்பட்டதால் தனது முடிவில் உறுதியாக இருப்பதாக மோகன்லால் அவர்களிடம் தெரிவித்தார். சுமார் 15 நிமிட பேச்சுவார்த்தைக்கு பிறகு உம்மன்சாண்டி அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.

இந்த சந்திப்பு பற்றி திருவஞ்சூர் ராதாகிருஷ்ணன் கூறும்போது மோகன்லால் திரும்ப பெற மறுத்த தொகையை அவரது விருப்பப்படி நலத்திட்ட உதவிகளுக்கு பயன்படுத்தலாமா? அல்லது முதல்–மந்திரியின் நிவாரண நிதியில் சேர்க்கலாமா? என்பது பற்றி பிறகு முடிவு செய்யப்படும் என்றார்.


Post your comment





Related News
கேரள கன்னியாஸ்திரி விவகாரம் - பத்திரிகையாளரிடம் மன்னிப்பு கேட்ட நடிகர் மோகன் லால்
பாகுபலி பாணியில் உருவாகியுள்ள மோகன்லால், நிவின் பாலியின் காயம்குளம் கொச்சூன்னி.!
நிவின் பாலி படத்துக்கு வசனம் எழுதும் மதன் கார்கி..!
பிக்பாஸ் தினமும் மொத்தம் இத்தனை கோடி பேர் பார்க்கிறார்களா? - கமல் கூறிய அதிகாரப்பூர்வ தகவல்
மோகன்லாலின் 1000 கோடி படத்திற்கு புதிய சிக்கல்
தமிழில் 3டி தொழில்நுட்பத்தில் வெளியாகும் மோகன்லாலின் ‘புலிமுருகன்’
மங்காத்தா போல் படம் எடுக்கவா இல்லை உலக அளவில் ஒரு படம் வேண்டுமா- பிரேமம் இயக்குனரின் கேள்வி
சத்யராஜ் இல்லை, முதலில் கட்டப்பாவாக நடிக்கவிருந்தது இந்த நடிகர் தான்
மோகன்லால் படமே இன்னும் தொடங்கவில்லை- அதற்குள் எழுந்த பிரச்சனை
ரூ.1000 கோடி பட்ஜெட்டில் 5 மொழிகளில் உருவாகும் மகாபாரத கதை: அதிகாரப்பூர்வ அறிவிப்பு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions