மோகன்லால் பட பட்ஜெட்டை குறைத்த தயாரிப்பாளர்..!

Bookmark and Share

மோகன்லால் பட பட்ஜெட்டை குறைத்த தயாரிப்பாளர்..!

மோகன்லால் நடிக்கும் படங்களுக்கென்று ஒரு பட்ஜெட் மார்ஜின் இருக்கிறது. ஆனால் தற்போது அந்த அளவுக்கும் கீழே பட்ஜெட்டை குறைக்க முடிவு செய்திருக்கிறார் படத்தின் தயாரிப்பாளர் ஒருவர்.. மோகன்லால் நடிப்பதாக அறிவிக்கப்பட்ட 'புலி முருகன்' படத்தின் தயாரிப்பாளர் தான் அவர்.

அதனாலேயே படத்திற்கு பெயர் வைக்கப்பட்டதோடு சரி.. மேற்கொண்டு இந்த படம் வளர்வதற்கான அறிகுறியும் தெரியவில்லை.. இதற்கு காரணம் இயக்குனர் வைசாக் இயக்கத்தில் கடந்த மாதம் வெளியான 'கஸின்ஸ்' படம் பிளாப் ஆனதும் அதற்கு முன் வெளியான விஷூதன் சரியாக போகாததும் தான் இதற்கு காரணம் என்கிறார்கள்.  

இன்னும் ஒரு சிலர் இந்த புராஜெக்ட் கைவிடப்பட்டதாகவும் சொல்கிறார்கள். ஆனால் தயாரிப்பாளரோ மோகன்லால் படம் என்பதால் இதை கைவிட மறுக்கிறார். ஆனால் அதே சமயம் படத்தின் பட்ஜெட்டை குறைத்தால் தான் மேற்கொண்டு படத்தை நகர்த்துவேன் என கண்டிசனும் போட்டுள்ளார்.

அப்படியே ஆரம்பிப்பதாக வைத்துக்கொண்டாலும் மோகன்லால் தற்போது நான்கு படங்களில் பிசியாக நடித்துக்கொண்டிருபதால் இப்படி சிக்கலில் உள்ள படத்திற்கு நேரம் ஒதுக்குவாரா என்றும் தெரியவில்லை. அதனால் படம் தொடங்குமா அல்லது கைவிடப்படுமா என தெரியாமல் திரிசங்கு நிலையில் நிற்கிறார் 'புலி முருகன்'. 


Post your comment





Related News
கேரள கன்னியாஸ்திரி விவகாரம் - பத்திரிகையாளரிடம் மன்னிப்பு கேட்ட நடிகர் மோகன் லால்
பாகுபலி பாணியில் உருவாகியுள்ள மோகன்லால், நிவின் பாலியின் காயம்குளம் கொச்சூன்னி.!
நிவின் பாலி படத்துக்கு வசனம் எழுதும் மதன் கார்கி..!
பிக்பாஸ் தினமும் மொத்தம் இத்தனை கோடி பேர் பார்க்கிறார்களா? - கமல் கூறிய அதிகாரப்பூர்வ தகவல்
மோகன்லாலின் 1000 கோடி படத்திற்கு புதிய சிக்கல்
தமிழில் 3டி தொழில்நுட்பத்தில் வெளியாகும் மோகன்லாலின் ‘புலிமுருகன்’
மங்காத்தா போல் படம் எடுக்கவா இல்லை உலக அளவில் ஒரு படம் வேண்டுமா- பிரேமம் இயக்குனரின் கேள்வி
சத்யராஜ் இல்லை, முதலில் கட்டப்பாவாக நடிக்கவிருந்தது இந்த நடிகர் தான்
மோகன்லால் படமே இன்னும் தொடங்கவில்லை- அதற்குள் எழுந்த பிரச்சனை
ரூ.1000 கோடி பட்ஜெட்டில் 5 மொழிகளில் உருவாகும் மகாபாரத கதை: அதிகாரப்பூர்வ அறிவிப்பு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions