இசையமைப்பாளருக்காக ஒரு படம் நடிக்கிறார் மோகன்லால்..!

Bookmark and Share

இசையமைப்பாளருக்காக ஒரு படம் நடிக்கிறார் மோகன்லால்..!

மலையாள சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவர்தான் எம்.ஜி.ஸ்ரீகுமார். மோகன்லாலின் மிக நெருங்கிய நண்பரும் கூட. இப்போது இவருக்காக மோகன்லால் ஒரு படத்தில் நடித்து தர இருக்கிறார்.

முதலில் இந்தப்படத்தை ஸ்ரீகுமார் தயாரிப்பதாகவும், பிரபல இயக்குனரான சிபிமலயில் இயக்கப்போவதாகவும் சொல்லப்பட்டது. காரணம் மோகன்லாலை வைத்து மியூசிக்கல் சப்ஜெக்ட்டான 'பரதம்', 'ஹிஸ் ஹைனஸ் அப்துல்லா', 'கமலதாளம்' ஆகிய படங்களை இயக்கியவர் சிபிமலயில்.

ஆனால் இப்போது எம்.ஜி.ஸ்ரீகுமாரே தயாரிப்புடன் படத்தை இயக்கவும் உள்ளதாக தெரிகிறது. இதுகுறித்து தனது பேஸ்புக் பக்கத்தில் தெரிவித்துள்ள ஸ்ரீகுமார், அவரது ரசிகர்களிடம், “மோகன்லாலை வைத்து ஒரு படம் இயக்கினால் எப்படி இருக்கும்..? அது 'பரதம்' மாதிரி மியூசிக்கல் படமாக இருக்கலாமா அல்லது 'நரசிம்மம்' மாதிரி ஆக்சன் படமாக இருக்கலாமா என கேள்வியையும் கேட்டுள்ளார். ஆக மோகன்லாலுடன் அவர் இணைவது இந்த கேள்வி மூலம் உறுதியாகிவிட்டது.


Post your comment





Related News
கேரள கன்னியாஸ்திரி விவகாரம் - பத்திரிகையாளரிடம் மன்னிப்பு கேட்ட நடிகர் மோகன் லால்
பாகுபலி பாணியில் உருவாகியுள்ள மோகன்லால், நிவின் பாலியின் காயம்குளம் கொச்சூன்னி.!
நிவின் பாலி படத்துக்கு வசனம் எழுதும் மதன் கார்கி..!
பிக்பாஸ் தினமும் மொத்தம் இத்தனை கோடி பேர் பார்க்கிறார்களா? - கமல் கூறிய அதிகாரப்பூர்வ தகவல்
மோகன்லாலின் 1000 கோடி படத்திற்கு புதிய சிக்கல்
தமிழில் 3டி தொழில்நுட்பத்தில் வெளியாகும் மோகன்லாலின் ‘புலிமுருகன்’
மங்காத்தா போல் படம் எடுக்கவா இல்லை உலக அளவில் ஒரு படம் வேண்டுமா- பிரேமம் இயக்குனரின் கேள்வி
சத்யராஜ் இல்லை, முதலில் கட்டப்பாவாக நடிக்கவிருந்தது இந்த நடிகர் தான்
மோகன்லால் படமே இன்னும் தொடங்கவில்லை- அதற்குள் எழுந்த பிரச்சனை
ரூ.1000 கோடி பட்ஜெட்டில் 5 மொழிகளில் உருவாகும் மகாபாரத கதை: அதிகாரப்பூர்வ அறிவிப்பு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions