கேரள அரசு விளம்பரங்களுக்கு முழுக்கு போட நடிகர்கள் முடிவு..?

Bookmark and Share

கேரள அரசு விளம்பரங்களுக்கு முழுக்கு போட நடிகர்கள் முடிவு..?

மம்முட்டி, மோகன்லால் உட்பட பல சீனியர் மற்றும் ஜூனியர் நடிகர் நடிகைகள் அனைவருமே கேரள அரசு தயாரிக்கும் விளம்பரப்படங்களில் இலவசமாகவோ அல்லது குறைந்த ஊதியத்திலோ நடித்து  கொடுப்பது வழக்கம்.

அதில் நடிப்பதற்கு தயக்கம் காட்டியதும் இல்லை. ஆனால் இனி அப்படி நடிக்க வேண்டுமா என்கிற எண்ணம் நடிகர் சங்கத்திற்கு தோன்றியுள்ளது. காரணம் தற்போது கேரள அரசாங்கம் காப்பிரைட் ட்ரான்ஸ்பர் அதாவது படத்தின் உரிமையை எந்த விதத்திலும் விற்பதற்கு அல்லது மாற்றுவதற்கு கூடுதலாக விதித்திருக்கும் 5 சதவீத வாட் வரி தான்.

இந்த வரி விதிப்பானது, திரைப்பட வினியோகம், ஆடியோ-வீடியோ ரைட்ஸ் விற்பனை, சாட்டிலைட் விற்பனை உட்பட பல ஏரியாக்களிலும் வியாபார பாதிப்பை ஏற்படுத்தும்.

இந்த வரிவிதிப்பிற்கு எதிராக மலையாள இயக்குனர் உன்னி கிருஷ்ணன் கண்டனம் தெரிவித்திருக்கும் நிலையில்,  தங்களது எதிர்ப்பையும் தெரிவிக்கும் விதமாகத்தான் இந்த முடிவை நடிகர் சங்கம் எடுக்கப்போவதாக முடிவு செய்துள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வமான அறிவிப்பு விரைவில் வெளியாகலாம் என்று தெரிகிறது.


Post your comment





Related News
கேரள கன்னியாஸ்திரி விவகாரம் - பத்திரிகையாளரிடம் மன்னிப்பு கேட்ட நடிகர் மோகன் லால்
பாகுபலி பாணியில் உருவாகியுள்ள மோகன்லால், நிவின் பாலியின் காயம்குளம் கொச்சூன்னி.!
நிவின் பாலி படத்துக்கு வசனம் எழுதும் மதன் கார்கி..!
பிக்பாஸ் தினமும் மொத்தம் இத்தனை கோடி பேர் பார்க்கிறார்களா? - கமல் கூறிய அதிகாரப்பூர்வ தகவல்
மோகன்லாலின் 1000 கோடி படத்திற்கு புதிய சிக்கல்
தமிழில் 3டி தொழில்நுட்பத்தில் வெளியாகும் மோகன்லாலின் ‘புலிமுருகன்’
மங்காத்தா போல் படம் எடுக்கவா இல்லை உலக அளவில் ஒரு படம் வேண்டுமா- பிரேமம் இயக்குனரின் கேள்வி
சத்யராஜ் இல்லை, முதலில் கட்டப்பாவாக நடிக்கவிருந்தது இந்த நடிகர் தான்
மோகன்லால் படமே இன்னும் தொடங்கவில்லை- அதற்குள் எழுந்த பிரச்சனை
ரூ.1000 கோடி பட்ஜெட்டில் 5 மொழிகளில் உருவாகும் மகாபாரத கதை: அதிகாரப்பூர்வ அறிவிப்பு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions