டைரக்சன் பண்ண தயாராகிவிட்டார் மோகன்லாலின் மகன்..!

Bookmark and Share

டைரக்சன் பண்ண தயாராகிவிட்டார் மோகன்லாலின் மகன்..!

நடிகரின் மகன் நடிகராகத்தான் வேண்டுமா என்ன..? மம்முட்டியின் மகன் துல்கர் சல்மான் முன்னணி ஹீரோவாக மலையாள திரையுலகில் அழுத்தமாக காலூன்றிவிட்டாரே, அப்படி என்றால் மோகன்லாலின் மகனும் நடிப்புத்துறையில் தான் இறங்குவார் என பலர் பந்தயம் கட்டினார்கள்.

ஆனால் மோகன்லாலோ தனது மகனுக்கு நடிப்பில் ஆர்வம் இல்லை என்று அப்போதே சொல்லிவிட்டார்.. நடிப்பதில் தானே ஆர்வம் இல்லை.. உதவி இயக்குனர் ஆகமாட்டார் என்று அவர் சொல்லவிலையே.. எஸ்.. மகனின் ஆர்வம் டைரக்சனில் தான் என்பது தெரிந்ததும் உடனே ஓகே சொன்ன மோகன்லால், தனக்கு 'த்ரிஷ்யம்' மூலம் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்த இயக்குனர் ஜித்து ஜோசப்பிடமே தொழில் கற்றுக்கொள்ள சொல்லிவிட்டார்..

'த்ரிஷ்யம்' ரீமேக்கான 'பாபநாசம்' படத்தில் உதவி இயக்குனராக ப்ரணவ் பணியாற்றிய விதம் ஜித்து ஜோசப்பை மிகவும் கவர்ந்துவிட்டது. அதனால் தான், அடுத்ததாக தற்போது திலீப்பை வைத்து  தான் இயக்கிவரும் 'லைப் ஆப் ஜோஸுட்டி' படத்திலும் பணிபுரிய சொல்லிவிட்டார்.

சமீபத்தில் அவர் அளித்துள்ள ஒரு பேட்டியில், ஒரு படத்தை இயக்கும் அளவுக்கு தயாராகிவிட்ட ப்ரணவ், நிச்சயம் ஒரு சிறந்த இயக்குனராக வரும் தகுதிகள் அனைத்தையும் பெற்றுள்ளார் என சிஷ்யனுக்கு சர்டிபிகேட் கொடுத்துள்ளார். அனேகமாக இந்தப்படம் முடிந்ததும் ப்ரணவ் தனியாக படம் இயக்குவர் என்றே தெரிகிறது. 


Post your comment





Related News
கேரள கன்னியாஸ்திரி விவகாரம் - பத்திரிகையாளரிடம் மன்னிப்பு கேட்ட நடிகர் மோகன் லால்
பாகுபலி பாணியில் உருவாகியுள்ள மோகன்லால், நிவின் பாலியின் காயம்குளம் கொச்சூன்னி.!
நிவின் பாலி படத்துக்கு வசனம் எழுதும் மதன் கார்கி..!
பிக்பாஸ் தினமும் மொத்தம் இத்தனை கோடி பேர் பார்க்கிறார்களா? - கமல் கூறிய அதிகாரப்பூர்வ தகவல்
மோகன்லாலின் 1000 கோடி படத்திற்கு புதிய சிக்கல்
தமிழில் 3டி தொழில்நுட்பத்தில் வெளியாகும் மோகன்லாலின் ‘புலிமுருகன்’
மங்காத்தா போல் படம் எடுக்கவா இல்லை உலக அளவில் ஒரு படம் வேண்டுமா- பிரேமம் இயக்குனரின் கேள்வி
சத்யராஜ் இல்லை, முதலில் கட்டப்பாவாக நடிக்கவிருந்தது இந்த நடிகர் தான்
மோகன்லால் படமே இன்னும் தொடங்கவில்லை- அதற்குள் எழுந்த பிரச்சனை
ரூ.1000 கோடி பட்ஜெட்டில் 5 மொழிகளில் உருவாகும் மகாபாரத கதை: அதிகாரப்பூர்வ அறிவிப்பு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions