“மோகன்லால் என்னை நம்பவேண்டும்” - இயக்குனர் லால்ஜோஸின் ஆதங்கம்..!

Bookmark and Share

“மோகன்லால் என்னை நம்பவேண்டும்” - இயக்குனர் லால்ஜோஸின் ஆதங்கம்..!

லால் ஜோஸ்... மலையாள சினிமாவின் மோஸ்ட் வான்டட் இயக்குனர்களில் ஒருவர். சினிமாவில் இயக்குனராக அடியெடுத்து வைத்து 17 ஆண்டுகள் ஆகிவிட்டன. 21 படங்களை இயக்கி முடித்துவிட்டு இப்போது 22வது படத்திற்கான படப்பிடிப்பையும் நடத்தி முடித்துவிட்டார்.

இவர் இயக்கியது எல்லாமே முன்னணி நடிகர்களின் படங்கள் தான். ஆனால் மோகன்லாலும் ஜெயராமும் ஏனோ அந்த பட்டியலில் இல்லை.. என்னதான் வெற்றிகரமான இயக்குனராக வலம் வந்தாலும் மோகன்லால் படத்தை இயக்கும் சந்தர்ப்பம் அமையவில்லை என்பது மிகப்பெரிய வருத்தம் அல்லவா..? சில வருடங்களுக்கு முன்பே மோகன்லாலையும் பிருத்விராஜையும் வைத்து ஒரு படம் இயக்குவதற்கான வேலைகளை ஆரம்பித்த லால் ஜோஸ், படத்திற்கு 'கஸின்ஸ்' என பெயர் வைத்து போட்டோ ஷூட்டெல்லாம் நடத்தினார்.

ஆனால் வெளியே தெரியாத சில காரணங்களால் அந்தப்படம் கைவிடப்பட்டது. அதற்கடுத்து மோகன்லாலும் லால்ஜோஸின் படத்தில் நடிக்க ஆர்வம் காட்டவில்லை..  இத்தனைக்கும் லால் ஜோசின் குருவான இயக்குனர் கமல் இயக்கிய 'விஷ்ணுலோகம்' படத்தில் அசிஸ்டன்ட் டைரக்டராக பணியாற்றிய லால்ஜோசை பார்த்து இவர் மிகப்பெரிய இயக்குனராக வருவார் என ஆருடம் சொன்னவர்தான் மோகன்லால்..

சொன்னபடியே பெரிய ஆளாக வளர்ந்தும் விட்டார் லால் ஜோஸ். பின் மோகன்லால் விலகுவதற்கு காரணம் என்னவாக இருக்கும்.? “மோகன்லால் போன்ற பெரிய நடிகர்களை இயக்கும்போது, மிகப்பெரிய பொறுப்பு நம் பக்கம் விழுகிறது.. அவருக்கேற்ற கதை அமையும்போது நிச்சயம் அவருடன் பணியாற்றுவேன். அதற்கு மோகன்லால் முழுமையாக என்மீது நம்பிக்கை வைக்க வேண்டும்” என்கிறார் ஆதங்கத்துடன்.


Post your comment





Related News
கேரள கன்னியாஸ்திரி விவகாரம் - பத்திரிகையாளரிடம் மன்னிப்பு கேட்ட நடிகர் மோகன் லால்
பாகுபலி பாணியில் உருவாகியுள்ள மோகன்லால், நிவின் பாலியின் காயம்குளம் கொச்சூன்னி.!
நிவின் பாலி படத்துக்கு வசனம் எழுதும் மதன் கார்கி..!
பிக்பாஸ் தினமும் மொத்தம் இத்தனை கோடி பேர் பார்க்கிறார்களா? - கமல் கூறிய அதிகாரப்பூர்வ தகவல்
மோகன்லாலின் 1000 கோடி படத்திற்கு புதிய சிக்கல்
தமிழில் 3டி தொழில்நுட்பத்தில் வெளியாகும் மோகன்லாலின் ‘புலிமுருகன்’
மங்காத்தா போல் படம் எடுக்கவா இல்லை உலக அளவில் ஒரு படம் வேண்டுமா- பிரேமம் இயக்குனரின் கேள்வி
சத்யராஜ் இல்லை, முதலில் கட்டப்பாவாக நடிக்கவிருந்தது இந்த நடிகர் தான்
மோகன்லால் படமே இன்னும் தொடங்கவில்லை- அதற்குள் எழுந்த பிரச்சனை
ரூ.1000 கோடி பட்ஜெட்டில் 5 மொழிகளில் உருவாகும் மகாபாரத கதை: அதிகாரப்பூர்வ அறிவிப்பு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions