புற்றுநோயால் பாதிக்கப்பட்ட ரசிகையை நேரில் சந்தித்த மோகன்லால் ‘செல்பி’ எடுத்து மகிழ்ச்சி

Bookmark and Share

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட ரசிகையை நேரில் சந்தித்த மோகன்லால் ‘செல்பி’ எடுத்து மகிழ்ச்சி

திருவனந்தபுரம் அருகே ஸ்ரீகாரியம் கட்லேரி பகுதியை சேர்ந்தவர் சுபத்ரா (வயது 68). இவர் பிரபல மலையாள நடிகர்  மோகன்லாலின் தீவிர ரசிகை. மோகன்லால் நடித்த திரைப்படங்களை தியேட்டருக்கு சென்று பார்த்து ரசிப்பது இவரது வழக்கம்.

இந்த நிலையில் சுபத்ரா புற்றுநோயால் உடல்நலம் பாதிக்கப்பட்டார். இதனால் அவரால் தியேட்டருக்கு செல்லமுடியாத நிலை  ஏற்பட்டது. ஆனாலும் அவர் டி.வி.யில் ஒளிபரப்பாகும் மோகன்லால் படங்களை தவறாமல் பார்த்துவிடுவார்.

சுபத்ராவுக்கு நோய் தாக்குதல் அதிகமானதால் அடிக்கடி அவரது உடல்நிலை பாதிக்கப்பட்டது. இந்த நிலையில் அவருக்கு  தன்னை கவர்ந்த நடிகரான மோகன்லாலை ஒருமுறையாவது நேரில் சந்தித்துவிட வேண்டும் என்ற ஆவல் அதிகமாக இருந்து  வந்தது.

இதைதொடர்ந்து சுபத்ரா மோகன்லாலை சந்திக்கும் தனது ஆசையை ‘வாட்ஸ்-அப்’ மூலம் அவருக்கு தெரிவித்தார். எனவே தனது  ரசிகையை நேரில் சந்தித்து அவரது விருப்பத்தை பூர்த்தி செய்ய மோகன்லால் விரும்பினார். அதனை முன்னிட்டு நேற்று அவரது  வீட்டிற்கு சென்று சுபத்ராவை மகிழ்ச்சியில் ஆழ்த்தினார்.

மோகன்லாலை நேரில் பார்த்த இன்ப அதிர்ச்சியில் சுபத்ராவுக்கு பேச்சே வரவில்லை. அவருக்கு ஆறுதல் கூறிய மோகன்லால்  விரைவில் புற்றுநோயில் இருந்து குணமாக தான் கடவுளை பிரார்த்திப்பதாக கூறினார். மேலும் சுபத்ராவுடன் செல்பியும் எடுத்து  அவரை மகிழ்ச்சியில் ஆழ்த்தினார்.

மோகன்லால் வந்துள்ள தகவல் கிடைத்ததும் அவரை பார்க்க ஏராளமான ரசிகர்கள் அங்கு திரண்டனர். அவர்களை பார்த்து  கையசைத்தபடி மோகன்லால் அங்கிருந்து விடைபெற்றார். 


Post your comment





Related News
தமிழில் 3டி தொழில்நுட்பத்தில் வெளியாகும் மோகன்லாலின் ‘புலிமுருகன்’
மங்காத்தா போல் படம் எடுக்கவா இல்லை உலக அளவில் ஒரு படம் வேண்டுமா- பிரேமம் இயக்குனரின் கேள்வி
சத்யராஜ் இல்லை, முதலில் கட்டப்பாவாக நடிக்கவிருந்தது இந்த நடிகர் தான்
மோகன்லால் படமே இன்னும் தொடங்கவில்லை- அதற்குள் எழுந்த பிரச்சனை
ரூ.1000 கோடி பட்ஜெட்டில் 5 மொழிகளில் உருவாகும் மகாபாரத கதை: அதிகாரப்பூர்வ அறிவிப்பு
ரூ 1000 கோடி பட்ஜெட்டில் உருவாகும் இந்தியப்படம்- ஹீரோ யார் தெரியுமா?
மம்மூட்டி, மோகன்லாலை வைத்து படம் தயாரிக்கும் பிரபல தமிழ் நடிகை
யாரும் இல்லாத நேரத்தில் மோகன்லால் இப்படி ஒரு காரியம் செய்தாரா?
சில்க் ஸ்மிதா பெயரை கேட்டாலே கமல்ஹாசன் நியாபகம் வருகிறதாம் பிரபல நாயகிக்கு- ஏன் தெரியுமா?
தல அஜித்தை போல சால்ட் அன் பெப்பர் லுக்கிற்கு மாறிய பிரபல மலையாள நடிகர்







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions