55வது பிறந்தநாள் கொண்டாடும் லாலேட்டன் மோகன்லால்..!

Bookmark and Share

55வது பிறந்தநாள் கொண்டாடும் லாலேட்டன் மோகன்லால்..!

கடந்த 30 வருடங்களாக மலையாள சினிமா மோகன்லால், மம்முட்டி என இரண்டு சக்கரங்களை மையமாக வைத்துதான் தனது காலத்தை நகர்த்தி வருகிறது.

அதில் ஒரு சக்கரமான மோகன்லால் இன்று தனது 55வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். 1978ஆம் வருடம் 'திரநோட்டம்'  என்ற படத்தின் மூலம் தனது திரையுலக வாழ்க்கையை துவங்கிய மோகன்லால், வெற்றிகரமாக 37 வருடங்களை ஹீரோவாகவே கம்பீரத்துடன் கடந்து வந்திருக்கிறார் என்பது ஆச்சர்யத்திலும் ஆச்சர்யம்.

இதுவரை கிட்டத்தட்ட 320 படங்களில் நடித்துள்ளார் மோகன்லால். எந்த கதாபாத்திரமானாலும் அதில் தன்னை நூறு சதவீதம் புகுத்திக்கொண்டு அந்த கேரக்டருக்கு உயிர்கொடுக்கும் வல்லமை அவருக்கு இருப்பதால் தான் அவரை 'கம்ப்ளீட் ஆக்டர்' என கேரள சினிமாவே கொண்டாடுகிறது.

அவர் வெற்றிப்படத்தில் நடிக்கிறாரா, இல்லை தோல்விப்படங்களாக கொடுக்கிறாரா என்கிற கவலையெல்லாம் ரசிகர்களுக்கு இல்லை. அவர் நடித்து படங்கள் வெளியாகிக்கொண்டே இருக்கிறதா, அது போதும் என்கிறார்கள் அவரது ரசிகர்கள். அது லாலேட்டனை இன்னும் உயிர்ப்புடன், துடிப்புடன் செயல்பட வைத்துக்கொண்டிருக்கிறது.


Post your comment





Related News
கேரள கன்னியாஸ்திரி விவகாரம் - பத்திரிகையாளரிடம் மன்னிப்பு கேட்ட நடிகர் மோகன் லால்
பாகுபலி பாணியில் உருவாகியுள்ள மோகன்லால், நிவின் பாலியின் காயம்குளம் கொச்சூன்னி.!
நிவின் பாலி படத்துக்கு வசனம் எழுதும் மதன் கார்கி..!
பிக்பாஸ் தினமும் மொத்தம் இத்தனை கோடி பேர் பார்க்கிறார்களா? - கமல் கூறிய அதிகாரப்பூர்வ தகவல்
மோகன்லாலின் 1000 கோடி படத்திற்கு புதிய சிக்கல்
தமிழில் 3டி தொழில்நுட்பத்தில் வெளியாகும் மோகன்லாலின் ‘புலிமுருகன்’
மங்காத்தா போல் படம் எடுக்கவா இல்லை உலக அளவில் ஒரு படம் வேண்டுமா- பிரேமம் இயக்குனரின் கேள்வி
சத்யராஜ் இல்லை, முதலில் கட்டப்பாவாக நடிக்கவிருந்தது இந்த நடிகர் தான்
மோகன்லால் படமே இன்னும் தொடங்கவில்லை- அதற்குள் எழுந்த பிரச்சனை
ரூ.1000 கோடி பட்ஜெட்டில் 5 மொழிகளில் உருவாகும் மகாபாரத கதை: அதிகாரப்பூர்வ அறிவிப்பு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions