காபி கொடுத்து வில்லனின் டென்ஷனை குறைத்த மோகன்லால்..!

Bookmark and Share

காபி கொடுத்து வில்லனின் டென்ஷனை குறைத்த மோகன்லால்..!

தற்போது பிரபல மலையாள இயக்குனர் ஜோஷியின் டைரக்ஷனில் 'லைலா ஓ லைலா' என்கிற படத்தில் நடித்து வருகிறார் மோகன்லால். இதில் மோகன்லாலுடன் மீண்டும் ஜோடி சேர்ந்துள்ளார் அமலாபால். இந்தப்படத்தின் பெரும்பகுதி படப்பிடிப்பை மும்பையில் நடத்தியுள்ளார் ஜோஷி.

இந்தப்படத்தில் மோகன்லாலுக்கு வில்லனாக நடிக்கும் ஜூனைத் ஷேக் காஷ்மீரை சேர்ந்தவர்.  இவர் ஏற்கனவே சுரேஷ் கோபி, ஜெயராமை வைத்து கடந்த வருடம் ஜோஷி இயக்கிய 'சலாம் காஷ்மீர்' என்கிற படத்தில் தீவிரவாதியாக நடித்தவர் தான்.

அந்தப்படத்தில் ஜூனைத்தின் நடிப்பு ஜோஷியை மிகவும் கவர்ந்துவிட்டதால், இந்தப்படத்தில் மெயின் வில்லனாக புரமோஷன் கொடுத்துவிட்டார். ஏற்கனவே பல படங்களில் நடித்திருந்தாலும், மோகன்லாலுடன் முதல் நாள் நடிக்கப்போகிறோம் என்பதால் ஜூனைத்துக்கு கொஞ்சம் படபடப்பு ஏற்படவே செய்ததாம்.

அதனால் முதல் காட்சி எடுப்பதற்கு முன்னரே மோகன்லாலிடம் போய், “சார். உங்களுடன் நடிக்கப்போகிறேன் என்பதால் கொஞ்சம் டென்ஷனாக இருக்கிறது“ என கூறியுள்ளார் ஜூனைத்.  

உடனே அவரை அருகில் அமரவைத்த மோகன்லால் இருவருக்கும் காபியை வரவழைத்து, அதை பருகியபடியே வில்லனுடன் சகஜமாக பேசினாராம். அதனால் சற்றே ரிலாக்ஸ் ஆன ஜூனைத், எந்தவித டென்ஷனுமின்றி நடித்தாராம்.

 


Post your comment





Related News
கேரள கன்னியாஸ்திரி விவகாரம் - பத்திரிகையாளரிடம் மன்னிப்பு கேட்ட நடிகர் மோகன் லால்
பாகுபலி பாணியில் உருவாகியுள்ள மோகன்லால், நிவின் பாலியின் காயம்குளம் கொச்சூன்னி.!
நிவின் பாலி படத்துக்கு வசனம் எழுதும் மதன் கார்கி..!
பிக்பாஸ் தினமும் மொத்தம் இத்தனை கோடி பேர் பார்க்கிறார்களா? - கமல் கூறிய அதிகாரப்பூர்வ தகவல்
மோகன்லாலின் 1000 கோடி படத்திற்கு புதிய சிக்கல்
தமிழில் 3டி தொழில்நுட்பத்தில் வெளியாகும் மோகன்லாலின் ‘புலிமுருகன்’
மங்காத்தா போல் படம் எடுக்கவா இல்லை உலக அளவில் ஒரு படம் வேண்டுமா- பிரேமம் இயக்குனரின் கேள்வி
சத்யராஜ் இல்லை, முதலில் கட்டப்பாவாக நடிக்கவிருந்தது இந்த நடிகர் தான்
மோகன்லால் படமே இன்னும் தொடங்கவில்லை- அதற்குள் எழுந்த பிரச்சனை
ரூ.1000 கோடி பட்ஜெட்டில் 5 மொழிகளில் உருவாகும் மகாபாரத கதை: அதிகாரப்பூர்வ அறிவிப்பு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions