நேரம் கிடைக்கும்போதெல்லாம் சென்னைக்கு வந்து செல்லும் மோகன்லால்

Bookmark and Share

நேரம் கிடைக்கும்போதெல்லாம் சென்னைக்கு வந்து செல்லும் மோகன்லால்

மலையாள நடிகர்தான் மோகன்லால் என்றாலும் தமிழ்நாட்டு மருமகன் என்பதால் கிட்டத்தட்ட அவரும் தமிழ்நாட்டை சேர்ந்தவர் மாதிரிதான்.  சென்னையில் பல இடங்களில் அவரது வீடுகள் இருப்பதால் மோகன்லாலுக்கு சென்னை பாசம் கொஞ்சம் அதிகமாகவே இருக்கும். அது அவ்வப்போது அவரது படங்களிலும் வெளிப்படும்.  

கேரளாவில் இருந்து சென்னைக்கு வந்து தங்கி, உதவி இயக்குனராக பணியாற்றி, இங்கேயே படம் இயக்க வாய்ப்பு தேடி அலைவார் உதயநாணுதாரம் படத்தில் மோகன்லால்.

மலையாள இயக்குநர் ரஞ்சித் இயக்கத்தில் உருவான ராக் அன்ட் ரோல் படத்திலும் இசையமைப்பாளராக நடித்திருக்கும் மோகன்லால் சென்னைனையை சேர்ந்தவராகவே நடித்திருப்பார்.

பாடகி வாய்ப்பு கேட்டு தன்னிடம் வரும் லட்சுமிராய் மீது காதல் வயப்படும் மோகன்லால், சென்னையில் உள்ள தனது இசைக்குழு மற்றும் ரவுடி நண்பர்களின் உதவியால் காதலில் ஜெயிப்பதாகவும் காட்சிகள் ராக் அன்ட் ரோல் படத்தில்அமைந்திருந்தன.

நேற்று வெளியாகியுள்ள லோஹம் படத்தில் கூட கோழிக்கோட்டில் கார் ட்ரைவராக நடித்திருக்கும் மோகன்லால், அந்த ஊர் ட்ராபிக் பற்றி ஆண்ட்ரியாவிடம் பேசும்போது “சென்னை மாதிரி பாலங்கள் இங்க இருக்கணும் மேடம்..

சென்னையை கண்டு நம்ம ஆட்கள் படிக்கணும்” என்று திரும்பத் திரும்பச் சென்னையின் பிரமாண்ட பாலங்கள் குறித்து வசனம் பேசுவதான காட்சிகள் சென்னை தியேட்டர்களில் ரசிகர்களின் கைதட்டலை வெகுவாக அள்ளுகின்றன.


Post your comment





Related News
கேரள கன்னியாஸ்திரி விவகாரம் - பத்திரிகையாளரிடம் மன்னிப்பு கேட்ட நடிகர் மோகன் லால்
பாகுபலி பாணியில் உருவாகியுள்ள மோகன்லால், நிவின் பாலியின் காயம்குளம் கொச்சூன்னி.!
நிவின் பாலி படத்துக்கு வசனம் எழுதும் மதன் கார்கி..!
பிக்பாஸ் தினமும் மொத்தம் இத்தனை கோடி பேர் பார்க்கிறார்களா? - கமல் கூறிய அதிகாரப்பூர்வ தகவல்
மோகன்லாலின் 1000 கோடி படத்திற்கு புதிய சிக்கல்
தமிழில் 3டி தொழில்நுட்பத்தில் வெளியாகும் மோகன்லாலின் ‘புலிமுருகன்’
மங்காத்தா போல் படம் எடுக்கவா இல்லை உலக அளவில் ஒரு படம் வேண்டுமா- பிரேமம் இயக்குனரின் கேள்வி
சத்யராஜ் இல்லை, முதலில் கட்டப்பாவாக நடிக்கவிருந்தது இந்த நடிகர் தான்
மோகன்லால் படமே இன்னும் தொடங்கவில்லை- அதற்குள் எழுந்த பிரச்சனை
ரூ.1000 கோடி பட்ஜெட்டில் 5 மொழிகளில் உருவாகும் மகாபாரத கதை: அதிகாரப்பூர்வ அறிவிப்பு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions