18 வருடமாக படம் இயக்காத இயக்குனரை அழைத்து வாய்ப்பு தந்த மோகன்லால்..!

Bookmark and Share

18 வருடமாக படம் இயக்காத இயக்குனரை அழைத்து வாய்ப்பு தந்த மோகன்லால்..!

நம்ம தமிழ் திரையுலகில் மேலே சொன்ன விஷயம் சாத்தியமா..? நிச்சயமாக இல்லை.. காரணம் தன்னை வைத்து இரண்டு சூப்பர்ஹிட் படங்களை கொடுத்த இயக்குனர் கூட, கொஞ்சம் சரிவை சந்தித்தால், அவருக்கு ஒரு படம் நடித்து தந்து அவரை கைதூக்கிவிடும் மனோபாவம் கொஞ்சம் கூட இங்கிருப்பவர்களிடம் இல்லை.

ஆனால்  18 வருடமாக படம் இயக்காத ஒரு இயக்குனரை அழைத்து மோகன்லால் வாய்ப்பு தந்துள்ளார் என்றால் அவர் மீது மோகன்லால் எவ்வளவு நம்பிக்கை வைத்திருப்பார் பாருங்கள்..

அந்த இயக்குனரின் பெயர் பி.அனில். 25 வருடங்களுக்கு முன் மோகன்லாலை வைத்து இயக்கிய 'அடிவேருகள்' என்கிற படத்தின் மூலம் இயக்குனர் ஆனவர் தான் இந்த அனில்.. மோகன்லாலை வைத்து மட்டுமே தொடர்ந்து நான்கு படங்களை இயக்கியுள்ள அனில் கடைசியாக 1997ல் சுரேஷ்கோபியை வைத்து, 'சூர்யகாந்தி' என்கிற படத்தை இயக்கியதோடு பீல்டை விட்டு ஒதுங்கியிருந்தார்.

தற்போது மோகன்லாலை வைத்து அவர் இயக்கவுள்ள படத்திற்கு 'பாரத ரத்னா' என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இதில் மோகன்லால் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். இந்தப்படத்தின் கதையை ஐந்து வருடங்களுக்கு முன்பே எழுதிவிட்டாராம் அனில்.

ஆனால் காலநேரம் இப்போதுதான் கனிந்து வந்திருக்கிறது. இதன் படப்பிடிப்பை ஹைதராபாத் மற்றும் அதன் சுற்று வட்டாரங்களில் படமாக்க முடிவு செய்துள்ளார்களாம். தற்போது ரஞ்சித்தின் இயக்கத்தில் 'லோஹம்' படத்தில் நடித்துவரும் மோகன்லால் அதை முடித்துவிட்டு இந்தப்படத்தில் இணைவார் என தெரிகிறது.

 


Post your comment





Related News
கேரள கன்னியாஸ்திரி விவகாரம் - பத்திரிகையாளரிடம் மன்னிப்பு கேட்ட நடிகர் மோகன் லால்
பாகுபலி பாணியில் உருவாகியுள்ள மோகன்லால், நிவின் பாலியின் காயம்குளம் கொச்சூன்னி.!
நிவின் பாலி படத்துக்கு வசனம் எழுதும் மதன் கார்கி..!
பிக்பாஸ் தினமும் மொத்தம் இத்தனை கோடி பேர் பார்க்கிறார்களா? - கமல் கூறிய அதிகாரப்பூர்வ தகவல்
மோகன்லாலின் 1000 கோடி படத்திற்கு புதிய சிக்கல்
தமிழில் 3டி தொழில்நுட்பத்தில் வெளியாகும் மோகன்லாலின் ‘புலிமுருகன்’
மங்காத்தா போல் படம் எடுக்கவா இல்லை உலக அளவில் ஒரு படம் வேண்டுமா- பிரேமம் இயக்குனரின் கேள்வி
சத்யராஜ் இல்லை, முதலில் கட்டப்பாவாக நடிக்கவிருந்தது இந்த நடிகர் தான்
மோகன்லால் படமே இன்னும் தொடங்கவில்லை- அதற்குள் எழுந்த பிரச்சனை
ரூ.1000 கோடி பட்ஜெட்டில் 5 மொழிகளில் உருவாகும் மகாபாரத கதை: அதிகாரப்பூர்வ அறிவிப்பு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions