குடியரசு தின விழாவில் மோகன்லாலுக்கு மரியாதை..!

Bookmark and Share

குடியரசு தின விழாவில் மோகன்லாலுக்கு மரியாதை..!

இந்த வருடம் டில்லியில் நடைபெற்ற 66வது குடியரசு தின விழாவில் அமெரிக்க அதிபர் ஒபாமா நேரில் கலந்துகொண்டது ஒரு பெருமையான விஷயம் என்றால், மத்திய அரசின் சிறப்பு அழைப்பை ஏற்று கேரளாவில் இருந்து மலையாள சூப்பர்ஸ்டார் மோகன்லால் தனது மனைவியுடன் கலந்துகொண்டது அவரது ரசிகர்களையும், ஏன் கேரளா மக்களையும் கூட சந்தோஷப்படுத்தியுள்ளது.

மோகன்லால் ராணுவத்தில் இருந்ததில்லை. ஆனால் ராணுவத்திற்கு பெருமைசேர்க்கும் விதமாக நிறைய ராணுவப்படங்களில் நடித்திருக்கிறார். அதனால் மோகன்லாலுக்கு சில வருடங்களுக்கு முன்பு மத்திய அரசு அவருக்கு கௌரவ ராணுவ கர்னல் பதவியை வழங்கி கௌரவப்படுத்தியது.

இதனால் மோகன்லாலும் அவ்வப்போது ராணுவம் மற்றும் அரசு சம்பந்தப்பட்ட விழாக்களில் கலந்துகொண்டு வந்தார். அந்தவகையில் இப்போதும் 66வது குடியரசு தின விழாவில் கலந்துகொண்ட மோகன்லால், “அணிவகுப்பை பார்ப்பதற்காக காலை ஏழு மணிக்கே சென்றுவிட்டேன்.. அந்தசமயம் சற்று மழை தூறிக்கொண்டிருந்தாலும், மக்கள் கூட்டம் அதை பொருட்படுத்தாமல்  விழாவைக்காண கூடி நின்றது பரவசமாக இருந்தது.. ஒரு இந்தியனாக இந்த விழாவில் கலந்துகொண்டதில் பெருமைப்படுகிறேன்” என கூறியுள்ளார்.   


Post your comment





Related News
கேரள கன்னியாஸ்திரி விவகாரம் - பத்திரிகையாளரிடம் மன்னிப்பு கேட்ட நடிகர் மோகன் லால்
பாகுபலி பாணியில் உருவாகியுள்ள மோகன்லால், நிவின் பாலியின் காயம்குளம் கொச்சூன்னி.!
நிவின் பாலி படத்துக்கு வசனம் எழுதும் மதன் கார்கி..!
பிக்பாஸ் தினமும் மொத்தம் இத்தனை கோடி பேர் பார்க்கிறார்களா? - கமல் கூறிய அதிகாரப்பூர்வ தகவல்
மோகன்லாலின் 1000 கோடி படத்திற்கு புதிய சிக்கல்
தமிழில் 3டி தொழில்நுட்பத்தில் வெளியாகும் மோகன்லாலின் ‘புலிமுருகன்’
மங்காத்தா போல் படம் எடுக்கவா இல்லை உலக அளவில் ஒரு படம் வேண்டுமா- பிரேமம் இயக்குனரின் கேள்வி
சத்யராஜ் இல்லை, முதலில் கட்டப்பாவாக நடிக்கவிருந்தது இந்த நடிகர் தான்
மோகன்லால் படமே இன்னும் தொடங்கவில்லை- அதற்குள் எழுந்த பிரச்சனை
ரூ.1000 கோடி பட்ஜெட்டில் 5 மொழிகளில் உருவாகும் மகாபாரத கதை: அதிகாரப்பூர்வ அறிவிப்பு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions