வீண்பழியால் காயம்பட்டுள்ள மோகன்லால்..!

Bookmark and Share

வீண்பழியால் காயம்பட்டுள்ள மோகன்லால்..!

எந்த நேரத்தில் தேசிய விளையாட்டு போட்டிகளின் துவக்க விழாவில் தனது 'லாலிசம்' இசைக்குழுவின் இசை நிகழ்ச்சியை நடத்த மோகன்லால் முடிவு செய்தாரோ, அப்போதிருந்து அவர்மீது தேவையில்லாத வீண்பழிகள் குத்திக்கிழிக்கும் அம்புகளாய் பாய்ந்து கொண்டிருக்கின்றன.

இந்த இசை நிகழ்ச்சிக்காக அவர் கேரள அரசிடம் இரண்டு கோடி ரூபாய் கேட்டார் என்று பரவிய செய்திதான் பிரச்னையின் ஆணிவேர்.. மலையாள இயக்குனர் வினயன் கூட, தான் ஏதோ ஒரு மேதாவி போல, உண்மை எதுவென அறிந்துகொள்ளாமல் மோகன்லாலை விமர்சித்திருக்கிறார்.

ஆனால் இந்த இசைக்குழுவின் பிரதான இசையமைப்பாளரான ரதீஷ் வேகா இது பற்றி கூறும்போது, “மோகன்லால் இசைக்குழுவை ஆரம்பித்ததும், தேசிய விளையாட்டு போட்டிகளின் துவக்கவிழாவின்போது இசை நிகழ்ச்சி நடத்த முடிவு செய்ததும், அவரது ஆத்மார்த்தமான இசை ஆர்வத்தினால் தான்.. இந்த நிகழ்ச்சிக்காக செலவிடும் நேரத்தில், அவர் இந்த இரண்டுகோடி ரூபாயை, ஒரு படத்தில் நடித்து சம்பாதித்து விடுவார். அப்படியிருக்க தேவையில்லாமல் அவர்மீது இரண்டுகோடி ரூபாய் கேட்டார் என அபாண்டமாக வீண்பழி சுமத்துவது அர்த்தமற்றது” என கொதித்திருக்கிறார்.


Post your comment





Related News
கேரள கன்னியாஸ்திரி விவகாரம் - பத்திரிகையாளரிடம் மன்னிப்பு கேட்ட நடிகர் மோகன் லால்
பாகுபலி பாணியில் உருவாகியுள்ள மோகன்லால், நிவின் பாலியின் காயம்குளம் கொச்சூன்னி.!
நிவின் பாலி படத்துக்கு வசனம் எழுதும் மதன் கார்கி..!
பிக்பாஸ் தினமும் மொத்தம் இத்தனை கோடி பேர் பார்க்கிறார்களா? - கமல் கூறிய அதிகாரப்பூர்வ தகவல்
மோகன்லாலின் 1000 கோடி படத்திற்கு புதிய சிக்கல்
தமிழில் 3டி தொழில்நுட்பத்தில் வெளியாகும் மோகன்லாலின் ‘புலிமுருகன்’
மங்காத்தா போல் படம் எடுக்கவா இல்லை உலக அளவில் ஒரு படம் வேண்டுமா- பிரேமம் இயக்குனரின் கேள்வி
சத்யராஜ் இல்லை, முதலில் கட்டப்பாவாக நடிக்கவிருந்தது இந்த நடிகர் தான்
மோகன்லால் படமே இன்னும் தொடங்கவில்லை- அதற்குள் எழுந்த பிரச்சனை
ரூ.1000 கோடி பட்ஜெட்டில் 5 மொழிகளில் உருவாகும் மகாபாரத கதை: அதிகாரப்பூர்வ அறிவிப்பு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions